Published:Updated:

ட்விட்டர் சர்வே: உள்கட்டமைப்புத் திட்டங்கள்... நிறைவேற்றப்படாமல் இருக்க என்ன காரணம்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ட்விட்டர் சர்வே: உள்கட்டமைப்புத் திட்டங்கள்... நிறைவேற்றப்படாமல் இருக்க என்ன காரணம்?
ட்விட்டர் சர்வே: உள்கட்டமைப்புத் திட்டங்கள்... நிறைவேற்றப்படாமல் இருக்க என்ன காரணம்?

ட்விட்டர் சர்வே: உள்கட்டமைப்புத் திட்டங்கள்... நிறைவேற்றப்படாமல் இருக்க என்ன காரணம்?

பிரீமியம் ஸ்டோரி

ள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதில் நம் நாடு மிகவும் பின்தங்கியிருக்கிறது. உள்கட்டமைப்புத் திட்டங்கள் என்றால், சாலைகளைப் போடுவது மட்டுமல்ல, மின்சார வசதி, நீர்ப் பாசன வசதி, குடிதண்ணீர் வசதி, கால்வாய் வசதி எனப் பொதுமக்களுக்குத் தேவைப்படும் வசதிகளைச் செய்துதருவதுடன், துறைமுகம், விமானப் போக்குவரத்து எனத் தொழில் துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளையும் செய்துதருவதுதான்.

ட்விட்டர் சர்வே: உள்கட்டமைப்புத் திட்டங்கள்... நிறைவேற்றப்படாமல் இருக்க என்ன காரணம்?

நம் நாட்டில் உள்கட்டமைப்புத் திட்டங்களை முழுமையாகச் செய்துமுடிக்க ஒரு லட்சம் கோடி ரூபாயைச் செலவழிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. இவ்வளவு பணம் நம்மிடம் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. இந்த நிலையில், நம் நாட்டில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் சரிவர நிறைவேற்றப்படாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்கிற கேள்வியை நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டு, அதற்கு மூன்று பதில்களையும் தந்திருந்தோம்.

நாம் தந்திருந்த பதில்களில் ஏறக்குறைய 59% பேர், ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யமே உள்கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப் படாமல் இருப்பதற்குக் காரணம் என்று சொல்லி யிருக்கிறார்கள். எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரி களும் பெரிய அளவில் ஊழல் செய்வதால்தான் பலவிதமான உள்கட்டமைப்புத் திட்டங்கள் நடக்காமலே போய்விடுகின்றன.

ட்விட்டர் சர்வே: உள்கட்டமைப்புத் திட்டங்கள்... நிறைவேற்றப்படாமல் இருக்க என்ன காரணம்?

கிட்டத்தட்ட 26% பேர், சரியான அரசியல் தலைமை இல்லை என்பதே உள்கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கக் காரணம் என்று சொல்லியிருக்கின்றனர். உண்மைதான், சிங்கப்பூரின் லீ குவான் யு போல ஒரு தலைவர் இங்கு இருந்திருந்தால், தேவையான உள்கட்டமைப்புத் திட்டங்கள் எப்போதோ நிறைவேறியிருந்திருக்கும்.  ஏறக்குறைய 15% பேர் சரியான திட்டமிடல் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். இதுவும் சரியான கருத்தே. பெரும் செலவு செய்து ஒரு திட்டத்தை உருவாக்குவதும் பிறகு அதை உடைத்துவிட்டு, மீண்டும் கட்டுவதும்தான் தற்போது வழக்கமான விஷயமாக இருக்கிறது.

ஊழலும் லஞ்ச லாவண்யமும் ஒழிந்தால் மட்டுமே உள்கட்டமைப்புத் திட்டங்கள் சரியாக நிறைவேறும்!

- ஏ.ஆர்.குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு