Published:Updated:

பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்!

விகடன் விமர்சனக்குழு
பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்!
பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்!
பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டம்!

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க டாலருக்கு இணையாக இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததை அடுத்து, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக பெட்ரோல், மற்றும் டீசல் விற்பனையை கட்டுப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதனால், பெட்ரோல் விற்பனை நிலையங்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக குறைக்கப்படும். அதன் மூலம் 16,000 கோடி அளவிலான அன்னிய செலவானியை குறைக்க முடியும் என மத்திய அரசுக்கு, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி பரிந்துரைள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள.

##~~##
மேலும், ஈரானில் இருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்யலாம் எனவும், ஈரான் இந்திய ரூபாயை வாங்கிக் கொண்டு கச்சா எண்ணெய் தருவதால் 850 டாலர் அன்னிய செலவாணியை சேமிக்க முடியும் எனவும் வீரப்ப மொய்லி ஆலோசனை தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, பெட்ரோல் விற்பனை நிலையங்களின் வேலை நேரத்தை குறைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.