Published:Updated:

பெட்ரோலை அதிகம் பயன்படுத்துபவர்கள் யார்?: ஆய்வில் தகவல்!

விகடன் விமர்சனக்குழு
பெட்ரோலை அதிகம் பயன்படுத்துபவர்கள் யார்?: ஆய்வில் தகவல்!
பெட்ரோலை அதிகம் பயன்படுத்துபவர்கள் யார்?: ஆய்வில் தகவல்!
பெட்ரோலை அதிகம் பயன்படுத்துபவர்கள் யார்?: ஆய்வில் தகவல்!

புதுடெல்லி: பெட்ரோலுக்கான மானியத்தை நிறுத்த அது பணக்காரர்களுக்கான எரிபொருள் என மத்திய அரசு கூறிவந்த நிலையில், அந்த கூற்றை தகர்ப்பதுபோன்று மொத்த பெட்ரோல் பயன்பாட்டில் 62 சதவீதம் இரு சக்கர வாகனங்களுக்கே செல்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்காக தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், "தற்போது பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர், மொபட் போன்ற இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள்.

எனவே நாட்டின் மொத்த பெட்ரோல் பயன்பாட்டில் 62 சதவீதம் இரு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கார்களுக்கு 27 சதவீதம் பெட்ரோல் பயன்படுகிறது. ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்களுக்கு 6 சதவீதம் பெட்ரோலும், 2 சதவீதம் இதர உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

டீசல்

எண்ணெய் இறக்குமதி தற்போது 9.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் செலவு ரூ.3 லட்சத்து 47 ஆயிரத்து 432 கோடியாகி இருக்கிறது. டீசல் தேவை 69 மில்லியன் டன். இதில் போக்குவரத்துக்காக 66 சதவீத டீசல் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்துக்காக 19 சதவீத டீசல் பயன்படுகிறது. டாக்சி போன்ற வர்த்தக வாகனங்கள், பஸ்கள், லாரிகள், மினி வேன்களுக்காக மட்டும் 38 சதவீத டீசல் பயன்படுத்தப்படுகிறது.

##~~##
4 மண்டலங்களில் தென் மாநிலங்களில்தான் போக்குவரத்துக்காக 77 சதவீத டீசல் பயன்படுத்தப்படுகிறது. வடமாநிலங்களில் இதற்கான பயன்பாடு 59 சதவீதம், வட மாநிலங்களில் விவசாயத்துக்காக 24 சதவீதம், தென் மாநிலங்களில் 10 சதவீதமும் டீசல் பயன்படுகிறது. இது தவிர மீன் பிடி படகுகள் போன்றவற்றுக்கும் டீசல் பயன்படுகிறது.