Published:Updated:

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

Vikatan Correspondent
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு!

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு  வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல்  விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என  மத்திய அரசு அனுமதி அளித்தது. அதேபோல் மாதம் ஒருமுறை  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அவ்வப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வு எனக்கூறி அடிக்கடி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 60 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.