Published:Updated:

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைப்பு!

விகடன் விமர்சனக்குழு
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைப்பு!
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைப்பு!
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைப்பு!

புதுடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 19ஆம் தேதிக்கு பிறகு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதன்படி, கடைசியாக கடந்த 1ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (15ஆம் தேதி) மேலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.59க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலை

இன்று மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு வரும் 19ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அங்கு அமலில் உள்ளன. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்வதால் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்வதற்கு தேர்தல் விதிமுறைகள் பொருந்தாது.

ஆனால், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்வதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக தற்போது டீசல் விலை குறையவில்லை. எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெற்ற பின், அதாவது வரும் 19ஆம் தேதிக்கு பிறகு டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நேற்று (14ஆம் தேதி) பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறும்போதும், ''தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் டீசல் விலை 19ஆம் தேதிக்கு பிறகு குறையும்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.