Published:Updated:

சமையல் கேஸ், பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!

சமையல் கேஸ், பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!
சமையல் கேஸ், பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!

சமையல் கேஸ், பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சமையல் கேஸ், பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியையடுத்து, சமையல் கேஸ் மற்றும் பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீப காலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 40 டாலராக இருந்தது. கடந்த 1986ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த விலை வீழ்ச்சி காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது. இதையடுத்து, சமையல் கேஸ் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக நிறுவனங்களின் லாப விகிதம் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு