Published:Updated:

உத்தப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டது

விகடன் விமர்சனக்குழு
உத்தப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டது
உத்தப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டது
உத்தப்பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டது

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகே சீல்தா-அஜ்மர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த ரயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 2 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும், 28 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

'காயம் அடைந்த அனைவருக்கும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்.' என்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.