Published:Updated:

பெட்ரோல் உயர்வை கண்டித்து 31 ல் ’பந்த்’:பா.ஜ. கூட்டணி அறிவிப்பு!

விகடன் விமர்சனக்குழு
பெட்ரோல் உயர்வை கண்டித்து 31 ல் ’பந்த்’:பா.ஜ. கூட்டணி அறிவிப்பு!
பெட்ரோல் உயர்வை கண்டித்து 31 ல் ’பந்த்’:பா.ஜ. கூட்டணி அறிவிப்பு!
பெட்ரோல் உயர்வை கண்டித்து 31 ல் ’பந்த்’:பா.ஜ. கூட்டணி அறிவிப்பு!

புதுடெல்லி:பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து வருகிற மே 31 ம் தேதியன்று நாடு  தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜனதா தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த தேசிய ஜனநாயகக் கூட்டணி  அமைப்பாளரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான சரத்யாதவ்,”மே 31-ம் தேதி  நாடு தழுவிய முழு அடைப்பு நடத்துவது குறித்து எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள எல்லா  கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தியுள்ளோம்.இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

31-ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பில் பங்கேற்குமாறு மற்ற கட்சிகளையும்  அழைப்போம்.பெட்ரோல் விலை உயர்வுக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை  என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள்.இது மத்திய அரசின் கண்  துடைப்பு நாடகமாகும்.

அவர்கள் சொல்வது உண்மையானால், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தபோது  பெட்ரோல் விலை உயர்வு அறிவிக்கப்படாதது ஏன்? நாடாளுமன்ற கூட்டத் தொடர்  முடிந்த மறுநாளே பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டதில் இருந்தே மத்திய அரசு கபட  நாடகம் ஆடுவதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

பெட்ரோல் விலை உயர்வை நாங்கள் நிர்ணயிப்பதில்லை.எண்ணெய் நிறுவனங்கள்தான்  இதை முடிவு செய்கின்றன என்று அரசு சொல்லலாம்.ஆனால் மத்திய அரசின்  விருப்பத்துக்கு ஏற்ப தானே பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது.

மத்திய அரசு எல்லா துறைகளிலும் செயல் இழந்து விட்டது.அத்தியாவசியப் பொருட்கள்  விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்கு முழு தோல்வி ஏற்பட்டுள்ளது.  காங்கிரஸ் அரசுக்கு சாதாரண, சாமான்ய மக்கள் கஷ்டப்படுவது பற்றி துளி அளவுகூட  கவலை இல்லை.

பணக்காரர்கள், வசதி படைத்தவர்களுக்கு சாதகமாகவே காங்கிரஸ் அரசு நடந்து  கொள்கிறது. ஏழைகள் பற்றி மத்திய அரசு கவலைப்படுவதே இல்லை.ஏழைகள் மீது  மேலும் மேலும் சுமை ஏற்ற மத்திய அரசு ஒருபோதும் தயங்கியதே இல்லை.  பொருளாதாரத்தை காரணம் காட்டி மக்களை வதைக்கிறார்கள்”என்று மேலும் கூறினார்.