Published:Updated:

பெட்ரோல் விலை ரூ. 2.50 குறைய வாய்ப்பு?

விகடன் விமர்சனக்குழு
பெட்ரோல் விலை ரூ. 2.50 குறைய வாய்ப்பு?
பெட்ரோல் விலை ரூ. 2.50 குறைய வாய்ப்பு?
பெட்ரோல் விலை ரூ. 2.50 குறைய வாய்ப்பு?

புதுடெல்லி:பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை  தொடர்ந்து, லிட்டருக்கு ரூ. 2.50 வரை விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்தப்படலாம் என்றுதான் கடந்த வாரம்  செய்திகள் வெளியாகி இருந்தது.எண்ணெய் நிறுவனங்களும் அந்த அளவுக்குத்தான்  திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. 

ஆனால் எவ்வளவு உயர்த்தினாலும் எதிர்ப்பு கிளம்புவது நிச்சயம் என்பதால்,வழக்கமான  கூட்டி குறைக்கும் தந்திரத்தை பின்பற்றியே,பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.  7.50 ஆக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் எதிர்பார்த்ததுபோலவே பெட்ரோல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் கடும்  எதிர்ப்பு கிள்ம்பியுள்ளது.

இதனையடுத்து, காங்கிரஸ் ஆட்சியிலுள்ள மாநில அரசுகளை வரியை  குறைக்குமாறு,அக்கட்சி கேட்டுக்கொண்டதை தொடர்ந்து ஜார்க்கண்ட் மற்றும் கேரளா  ஆகிய மாநிலங்களில் வரி குறைப்பு அமலாகி உள்ளது.

இதனிடையே,டீசல் மற்றும் சமையல் கேஸ் ஆகியவற்றின் விலையையும் அதிகரிக்க  எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.இதற்காக நாளை மத்திய பெட்ரோலியத்  துறை அமைச்சகத்துடன் அந்நிறுவனங்கள் ஆலோசிக்க உள்ளன.

அதே சமயம் பெட்ரோல் விலை உயர்வால் மத்திய அரசுக்கு எழுந்துள்ள கடும் எதிர்ப்பை  தொடர்ந்து,வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த பெட்ரோலியத் துறை அமைச்சர்  ஜெய்பால் ரெட்டி,தமது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார்.

இந்நிலையில்,நாளை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பெட்ரோல் விலை  குறைப்பு யோசனை முன்வைக்கப்பட்டு,பின்னர் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என  டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.