Published:Updated:

கேரளா,உத்தரகாண்டில் பெட்‌ரோல் விலை குறைப்பு!

கேரளா,உத்தரகாண்டில் பெட்‌ரோல் விலை குறைப்பு!
கேரளா,உத்தரகாண்டில் பெட்‌ரோல் விலை குறைப்பு!
கேரளா,உத்தரகாண்டில் பெட்‌ரோல் விலை குறைப்பு!

திருவனந்தபுரம்: கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் மீதான  விற்பனை வரி குறைக்கப்பட்டுள்ளதால் அங்கு அதன் விலை குறைந்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டதை தொடர்ந்து,நாடு முழுவதும்  அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து,மாநிலங்களி்ல விற்பனை வரியை குறைக்க வேண்டுமென மத்திய  அரசு கூறியது.குறிப்பாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதனை உடனடியாக  அமல்படுத்த வேண்டும் என அக்கட்சி தலைமை வலியுறுத்தியது.

இந்த வலியுறுத்தலை தொடர்ந்து,கேரளாவில் பெட்ரோலுக்கான விற்பனை வரி ரூ.1.63  வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதேப்போன்று ஜார்க்கண்டிலும் ரூ.1.87 வரை விற்பனை வரியை குறைக்க அம்மாநில  அரசு முடிவு செய்துள்ளது.