Published:Updated:

இதுதான் ரயில்வே உணவுகளின் விலை!

இதுதான் ரயில்வே உணவுகளின் விலை!
இதுதான் ரயில்வே உணவுகளின் விலை!

இதுதான் ரயில்வே உணவுகளின் விலை!

ரயிலில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலைப் பட்டியலை, இந்திய ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ஐஆர்சிடிசி (IRCTC) கேன்டீன் விற்பனையாளர்கள், தண்ணீர், டீ, காபி, சாப்பாடு உள்ளிட்ட பொருள்களை அதிக விலைக்கு விற்பதாக, ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம், ட்விட்டர், இ-மெயில் உள்ளிட்ட தளங்களில் புகார்கள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து, IRCTC மூலம் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருள்களின் விலைப் பட்டியலை, ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ட்விட்டரில் வெளியான விலைப் பட்டியலின்படி காபி, டீ 7 ரூபாய், தண்ணீர் 15 ரூபாய், காலைச் சிற்றுண்டி 30 ரூபாய், மதிய உணவு 50 ரூபாய். விலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டதைவிட கூடுதல் விலைக்கு விற்றால், புகார் அளிக்கும்படி பயணிகளுக்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ரயில் நிலையம் மற்றும் ரயிலில் விற்கப்படும் உணவுகளின் தரம் குறித்தும் புகார்கள் குவிந்துள்ளன. பிப்ரவரி மாதம், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, புதிய கேட்டரிங் கொள்கைகளை வகுத்தார். அதன்படி, முறையாக உணவு வழங்காத நிறுவனங்களின் ஒப்பந்தங்களைத் தடை செய்ய IRCTC-க்கு உத்தரவிட்டார்.  மேலும், ரயில் பயணிகள் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யும் முறையையும் அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்த உள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு