Published:Updated:

’பெட்ரோல் விலை மேலும் குறையும்’

’பெட்ரோல் விலை மேலும் குறையும்’
’பெட்ரோல் விலை மேலும் குறையும்’
’பெட்ரோல் விலை மேலும் குறையும்’

கொல்கத்தா: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கணிசமாக குறைந்து வருவதால்  பெட்ரோல் விலை மேலும் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி  தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.7.20 உயர்த்தப்பட்டது.இந்த விலை  உயர்வுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல்  விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது.ஆனால் இந்த விலை குறைப்பு போதாது  என்றும்,மேலும் விலையை குறைக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி  வருகின்றன.

இதனால் பெட்ரோல் விலையை மேலும் குறைப்பது பற்றி எண்ணெய் நிறுவனங்கள்  ஆய்வு செய்து வருகின்றன.

இந்நிலையில் பெட்ரோல் விலை மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர்  பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

”அதிர்ஷ்டவசமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை கணிசமாக குறைந்து  கொண்டிருக்கிறது.எனவே பெட்ரோல் விலை மேலும் குறைவதை எதிர்பார்க்கலாம்” என  அவர் கூறினார்.