Published:Updated:

பெட்ரோல் லிட்டருக்கு 70 காசுகள் உயர்வு!

Vikatan Correspondent
பெட்ரோல் லிட்டருக்கு 70 காசுகள் உயர்வு!
பெட்ரோல் லிட்டருக்கு 70 காசுகள் உயர்வு!
பெட்ரோல் லிட்டருக்கு 70 காசுகள் உயர்வு!

புதுடெல்லி: பெட்ரோல் விலையைப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 70 காசுகள் உயர்த்தியுள்ளன.

இதையடுத்து தலைநகர் டெல்லியில் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 67.78-லிருந்து ரூ. 68.48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் லிட்டருக்கு 89 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.இதையடுத்து பெட்ரோல் விலை ரூ. 72.27-லிருந்து ரூ. 73.16-ஆக உயர்ந்துள்ளது.இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

டாலருக்கு நிகரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு குறைந்ததும்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைஅதிகரித்ததுமே இந்த விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 54.96-லிருந்து ரூ. 55.36 ஆக சரிந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.1.41 நஷ்டம் ஏற்பட்டது. இதனால், பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலையை உயர்த்தவும், குறைக்கவும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு

பெட்ரோல் லிட்டருக்கு 70 காசுகள் உயர்வு!

அதிகாரம் அளித்துள்ளது.இதையடுத்து. இதுவரை இல்லாத வகையில் கடந்த மே மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.54 உயர்த்தப்பட்டது. இதற்கு நாடு தழுவிய அளவில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சிகள் சார்பில் பாரத் பந்த்தும் நடத்தப்பட்டது. பின்னர், மத்திய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து பெட்ரோல் விலையை ஜூன் 3-ம் தேதி லிட்டருக்கு ரூ. 2.02, ஜூன் 29-ம் தேதி ரூ. 2.46 என இருமுறை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மம்தா எதிர்ப்பு

இதனிடையே இந்த விலை உயர்வுக்கு ஏதிர்ப்பு தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, விலை உயர்வு குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்கவில்லை என்றும், விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.