Published:Updated:

கோவை: திமுக - அதிமுக மோதல்; பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு!

பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு
News
பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பு வீச்சு

அ.தி.மு.க - தி.மு.க-வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்த தி.மு.க-வினர் பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கி செருப்பு வீசினர். ஆனால், அது அவர்மீது படவில்லை.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் கோதவாடி குளம் உள்ளது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் கடந்த 30 ஆண்டுகளாக அந்தக் குளத்துக்கு தண்ணீர் எட்டிப்பார்க்காமல் இருந்தது. இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளாக, தன்னார்வலர்கள் அந்தக் குளத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கோதவாடி குளம்
கோதவாடி குளம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்தும் உதவி செய்யப்பட்டது. இந்த நிலையில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தின் உபரிநீர், கடந்த ஒரு மாத காலமாக கோதவாடி குளத்துக்குத் திறந்துவிடப்பட்டது.

இதன் காரணமாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு கோதவாடி குளம் இன்று நிறைந்தது. இதையடுத்து தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் இன்று கோதவாடி குளத்தை பார்வையிட்டனர். பொள்ளாச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் தன் ஆதரவாளர்களுடன் அங்கு சென்றிருந்தார்.

திமுக அதிமுக மோதல்
திமுக அதிமுக மோதல்

அதேநேரத்தில், தி.மு.க தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் உள்ளிட்ட தி.மு.க-வினரும் அங்கு வந்திருந்தனர். அப்போது அ.தி.மு.க - தி.மு.க-வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்த தி.மு.க-வினர் பொள்ளாச்சி ஜெயராமனை நோக்கிச் செருப்பு வீசினர். ஆனால், அது அவர்மீது படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், இரு தரப்பினரும் காரசாரமாக வாக்குவாதம் செய்துகொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதையடுத்து, போலீஸார் ஜெயராமனைப் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விளக்கமளித்த தி.மு.க-வினர், ``அரசும், தன்னார்வலர்களும் சேர்ந்து கோதவாடி குளத்துக்குத் தண்ணீர் வருவதைச் சாத்தியமாக்கியுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி, பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் ஆகியோர் இங்கு நேரடியாக வர திட்டமிடப்பட்டிருந்தது.

பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி ஜெயராமன்

அதற்குள் தண்ணீர் வர பொள்ளாச்சி ஜெயராமன்தான் காரணம் என்று அ.தி.மு.க-வினர் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டனர். அதைத்தான் நாங்கள் எதிர்த்தோம்" என்று தெரிவித்தனர்.