அரசியல்
அலசல்
Published:Updated:

‘சாராய அமைச்சர்... அரசியல் கோமாளி...’ - வெடித்த கார்... ஓயாத சத்தம்!

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணாமலை

மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர், சம்பவம் நடந்து ஆறு நாள்கள் கழித்து எங்கள் பந்த் அறிவிப்பை முறியடிக்க கோவைக்கு வருகிறார்

‘நாய்’, ‘பேய்’, ‘சாராய அமைச்சர்’, ‘அரசியல் கோமாளி’, ‘ஒத்த ஓட்டு ஓட்டைவாய்’ - நாட்டையே அதிரவைத்த கோவை கார் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜியும், பா.ஜ.க மாநிலத் தலைவரும் பரஸ்பரம் பயன்படுத்திய வார்த்தைகள் இவை.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்தப் பிரச்னையை முதலில் அரசியலாக்கிய பா.ஜ.க மாநிலத் தலைவர், சில வார்த்தைகளைவிட அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியும் அதே தரத்தில் பதிலடி கொடுத்தார். சொந்தக் கட்சி அறிவித்த பந்த் போராட்டத்தை, ‘அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை’ என்று சொல்லி நீதிமன்றத்தில் பல்டி அடித்தார் அந்த மாநிலத் தலைவர். ஆனாலும், அதற்காகத் தேதி குறிக்கப்பட்டிருந்த அதே அக்டோபர் 31-ம் தேதி கோவை விசிட் அடித்த அவர், சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்று கந்த சஷ்டி கவசம் பாடினார். “சிவன் கோயிலுக்குச் சென்று கந்த சஷ்டி பாடின ஒரே கரகாட்ட கோஷ்டி நம்ம கோமாளிதான்” என அவரை செந்தில் பாலாஜி மீண்டும் கலாய்த்தார்.

‘சாராய அமைச்சர்... அரசியல் கோமாளி...’ - வெடித்த கார்... ஓயாத சத்தம்!

பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ-வோ, “மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர், சம்பவம் நடந்து ஆறு நாள்கள் கழித்து எங்கள் பந்த் அறிவிப்பை முறியடிக்க கோவைக்கு வருகிறார். கடைகளைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என வியாபாரிகளை மிரட்டுகிறார்” என்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியோ, “ஒரு பிரச்னையைப் பெரிதாக்கி, அதன் மூலம் தேர்தலில் ஆதாயம் அடையலாம் என்பது தவறான சிந்தனை. அவர்களின் அறிவு அவ்வளவுதான். சம்பவம் நடந்த உடனே டி.ஜி.பி அங்கு வந்துவிட்டார். ஆனால், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ வானதி எங்கே போனார்... என்னை ‘சாராய அமைச்சர்’ என்பவர்கள், பாண்டிச்சேரியில் பல வகை மதுபானங்களை அறிமுகப்படுத்திய ஆளுநரை எப்படி அழைப்பார்கள்?” என்றார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இது குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் லோகநாதன், “இந்தச் சம்பவத்தில் ஏதோ சதி இருக்கிறது. இதை தி.மு.க உட்பட யாரும் மறுக்கவில்லை. ஏற்கெனவே 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஆதாயமடைந்துதான் பா.ஜ.க தேர்தலில் வெற்றிபெற்றது. இது போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது, மக்களைப் பணயம்வைத்து அதில் வளர வேண்டும் என நினைக்கிறார்கள். 1998 குண்டு வெடிப்புச் சம்பவத்திலிருந்து கோவை மீள 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, இந்தப் பிரச்னையைத் தனிப்பட்ட தாக்குதலாக மூன்றாம் தர அரசியல் செய்வது சரியல்ல. கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருப்பவர், தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

லோகநாதன்
லோகநாதன்

ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு மத்தியிலும், மாநிலத்திலும் ஆள்பவர்களுக்கு இருக்கிறது. அதை விட்டுவிட்டு மாறி மாறி வசைபாடுவதை கோவை மக்கள் ரசிக்கவில்லை!