Published:Updated:

``எது நல்லதோ, அதைச் செய்யுங்கள்!" - எடப்பாடியின் `கவனத்துக்குரிய' அப்ரோச்!

பி.ஜே.பி தரப்பில் இரண்டு மாநகராட்சிகளை எதிர்பார்ப்பதாகப் பேச்சு இருந்தது. இதுகுறித்து டீஸர் விட்டுப்பார்த்தார்கள். ஆனால்

எடப்பாடி
எடப்பாடி

"ஆளும்கட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக ஆரம்பித்துவிட்டன. உச்ச நீதிமன்றத்தில் நான்கு வார அவகாசம் கேட்டிருக்கிறது மாநிலத் தேர்தல் ஆணையம். அதற்குள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டிவிட்டார்கள். அனைத்து ஏற்பாடுகளையும் இந்த நான்கு வார அவகாசத்துக்குள் முடித்துவிட வேண்டுமென நினைக்கிறார்கள். இந்த அவகாசகத்துக்குள் தேர்தலுக்கான அடிப்படை வேலைகள் அனைத்தையும் முடித்தே ஆகவேண்டுமென்று கட்சி நிர்வாகிகளுக்கு 6-ம் தேதி கூட்டத்தில் கறார் உத்தரவு போடப்போகிறார்களாம்!'' விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2NNxe4q

"அப்படியானால் 'புலி வருவது' உறுதிதானா?"

"உறுமல் பலமாக இருப்பதைப் பார்த்தால், கண்டிப்பாக தேர்தல் நடந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. முதலில் கிராம ஊராட்சிகளுக்கான தேர்தலை நடத்திவிட்டு... பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கு அடுத்து நடத்தலாம் என்றுகூட ஒரு திட்டம் இருக்கிறதாம். நான்கு அல்லது ஐந்து கட்டங்களாக நடக்கலாம் என்கிறார்கள். கிராம ஊராட்சிகளுக்கு கட்சி சின்னம் இல்லை என்பதால், சீட் ஒதுக்கும் பிரச்னையே இல்லை. முடிந்தவர்கள் முட்டிமோதிக்கொள்ளவேண்டியதுதான். ஆனால், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என வரும்போது கூட்டணிக் கட்சிகள் கோதாவில் இறங்கும் என்பதுதான் அ.தி.மு.க தலைகளை யோசிக்கவைக்கிறதாம்."

எடப்பாடி
எடப்பாடி

"கூட்டணிக் கட்சிகளின் நிலை என்னவோ?"

"பி.ஜே.பி தரப்பில் இரண்டு மாநகராட்சிகளை எதிர்பார்ப்பதாகப் பேச்சு இருந்தது. இதுகுறித்து டீஸர் விட்டுப்பார்த்தார்கள். ஆனால், அ.தி.மு.க தரப்பிலிருந்து எந்த அசைவும் இல்லை என்பதால், தமிழகம் முழுவதும் பரவலாக பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என களம் கண்டு வென்றுவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால், இந்த விஷயம் தொடர்பாக அ.தி.மு.க-வுக்கு அழுத்தம் தருவதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.''

"தே.மு.தி.க., பா.ம.க?"

"தே.மு.தி.க தரப்பில் மிகுந்த அன்னியோன்யமாக இருப்பதால், ஒரு மாநகராட்சி கிடைக்கக்கூடும். பா.ம.க தரப்பில் தற்போது பெரிய அளவில் டிமாண்ட் வைக்கிறார்கள். குறிப்பாக சேலம், வேலூர் மாநகராட்சிகளைக் கைப்பற்றப் பார்க்கிறார்கள். ராமதாஸ் தரப்பிலிருந்து இப்போதே சிக்னல் வர ஆரம்பித்திருக்கிறது. இதுதான் அ.தி.மு.க தரப்பை கொஞ்சம் அசைத்துப்பார்க்கிறது."

"அமைச்சர்களைச் சந்தித்து அதிகாரிகள் ஏதோ முறையிட்டார்களாமே?"

"கடந்த சில மாதங்களாக பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்தி அதிரடி காட்டிவருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், புலம்பிக்கொண்டுள்ளனர். இவர்களில் சிலர், சில அமைச்சர்களைச் சந்தித்து, 'மாசா மாசம் பார்ட்டிக்கு ஃபண்ட்னு சொல்லி கேட்கிறீங்க. இன்னொரு பக்கம் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தி மிரட்டிக்கிட்டிருக்கு. என்ன செய்றது?' என்று புலம்ப, 'அமைதியாக இருங்கள் சி.எம்-மிடம் பேசி முடிவுசெய்கிறோம்' என்று சமாதானப்படுத்தினார்களாம். அதன்படியே சி.எம் வரை விஷயம் போயிருக்கிறது. ஆனால், அவர் அலட்டிக்கொள்ளவே இல்லையாம்."

"லஞ்சத்தை ஊக்குவிக்கக் கூடாது என நினைக்கிறாரோ முதல்வர்."

"ஆனால், முதல்வர்மீதே பெரிய புகார் பட்டியலை வாசித்திருக்கிறாரே மு.க.ஸ்டாலின்."

``எது நல்லதோ, அதைச் செய்யுங்கள்!" - எடப்பாடியின் `கவனத்துக்குரிய' அப்ரோச்!

'ஆளுங்கட்சிக்கு பினாமியான நிறுவனங்கள், பல கோடி ரூபாய் வருமானவரி ஏய்ப்பு செய்திருக்கின்றன' என்று முதல்வருக்கு நெருக்கமான ஈரோடு நிறுவனத்தில் நடைபெற்ற வருமானவரித் துறை ரெய்டு குறித்து சுட்டிக்காட்டியிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்த ஈரோடு நிறுவனம் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதையெல்லாம் நோட் செய்த பிறகே ரெய்டு நடந்திருக்கிறது. இந்த ரெய்டை நிறுத்தச் சொல்லி முக்கியப்புள்ளி ஒருவர் டெல்லி வரை பேசியும் பலன் இல்லையாம்."

"ஒரே நேரத்தில் 34 ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றி அதிரடி காட்டியிருக்கிறாரே எடப்பாடி?"

"சில அதிகாரிகளை கண்டிப்பாக மாற்றவேண்டும் என்றும், சிலரை இந்த இடத்தில் போடவேண்டும் என்றும் அமைச்சர்களிடமிருந்து தொடர் அழுத்தம். டி.ஜி.பி-யான திரிபாதி அதற்கான பட்டியலைத் தயார் செய்துள்ளார். பிறகு, சில திருத்தங்களை மட்டும் செய்யுங்கள் என்று முதல்வரிடம் அவர் தயங்கித் தயங்கிக் கேட்க, 'நிர்வாகரீதியாக எது நல்லதோ அதைச் செய்யுங்கள்' என்று எடப்பாடி சொல்ல, ஏகத்துக்கும் குளிர்ந்துவிட்டாராம் திரிபாதி. நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி-யாக ராஜசேகரன் மாற்றப்பட்டதற்குக் காரணமே, அமைச்சர் ஒருவர்தானாம். ஒரு பிரச்னைக்காக குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்மீது கறாராக நடவடிக்கை எடுத்துள்ளார் ராஜசேகரன். அப்போது, அமைச்சர் தரப்பிலிருந்து சிலர் சிபாரிசுக்குச் சென்றுள்ளனர். ஆனாலும், அவர் கேட்கவில்லையாம். தென்மாவட்டத்தில் இரண்டு அதிகாரிகள் மாற்றப்பட்டதன் பின்னணியிலும் இப்படி அமைச்சர்களின் தலையீடு இருக்கிறதாம்."

> "வாட்ஸப் ஒட்டுக்கேட்பு விவகாரம், பி.ஜே.பி-க்கு பெரிய தலைவலியாக மாறும்..."

> " 'வன்னியர்களை வைத்து எனக்கு எதிராக சதிசெய்கிறார்கள்' என்று பொன்முடி வருத்தத்தில் இருக்கிறாராமே?"

> "சரி... சசிகலா மறுபடியும் பயங்கரமான சிக்கலில் மாட்டியிருக்கிறாராமே?"

- இவை குறித்த கழுகாரின் தகவல்களை ஜூனியர் விகடனில் முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: மெகா சிக்கலில் சசிகலா! - 1,500 கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்கள்! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-nov-10

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |