Published:Updated:

கற்பனை பகுதி: உங்களையே கட்சித் தலைவர் ஆக்கிடுறேன்! - பன்னீருக்கு உத்தரவாதம் கொடுத்த சசி...

பன்னீர்செல்வம் - சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
பன்னீர்செல்வம் - சசிகலா

ஓவியம்: ஈ.அன்பரசன்

கற்பனை பகுதி: உங்களையே கட்சித் தலைவர் ஆக்கிடுறேன்! - பன்னீருக்கு உத்தரவாதம் கொடுத்த சசி...

ஓவியம்: ஈ.அன்பரசன்

Published:Updated:
பன்னீர்செல்வம் - சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
பன்னீர்செல்வம் - சசிகலா

அரசியலில் எதுவும் நடக்கலாம்... அதுவும் அ.தி.மு.க-வில் எதிர்பார்த்ததைவிடவும் நடக்கலாம் என்கிற சூழலில் சசிகலாவும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் சந்தித்தால் எப்படியிருக்கும், அவர்கள் என்ன பேசுவார்கள்? இதோ ஒரு கற்பனைச் சந்திப்பு...

சசிகலா: வாங்க பன்னீர், நல்லா இருக்கீங்களா...உங்களுக்கு என்ன, நல்லாத்தான் இருப்பீங்க. அடடே... முன்னவிட நல்லா குனியுறீங்களே, வெரிகுட்!

பன்னீர்: குனிஞ்சு ரொம்ப நாள் ஆச்சும்மா... அதான், பழைய வீடியோவெல்லாம் பார்த்து ஒரு வாரம் டிரெய்னிங் எடுத்தேன்மா. எனக்கு உடம்பெல்லாம் உதறுதும்மா!

சசிகலா: ஏன்... ஏசி ஜாஸ்தியா இருக்கா... குறைக்கச் சொல்லவா?

பன்னீர்: அது இல்லைம்மா... உங்களுக்கு எதிராகவே ‘தர்மயுத்தம்’ நடத்தி ஏதேதோ பேசிட்டேன். அதான் வருத்தமா இருக்கு...

சசிகலா: ஒருகாலத்துல அக்காவும் நானும்கூடத்தான் உங்களைக் கண்டபடி பேசியிருக்கோம்... அதையெல்லாம் சாந்த சொரூபியாத்தானே ஏத்துக்கிட்டீங்க பன்னீர். அவ்வளவு ஏன்... ‘பன்னீரும் ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள்’னு சொன்னேன். அப்பவும் சிரிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க. பழசையெல்லாம் விடுங்க. கட்சியை எப்படி மீட்கணுங்கிறதைத்தான் இப்ப பார்க்கணும். நீங்க என் பக்கம் வந்துடுங்க. உங்களையே கட்சித் தலைவரா ஆக்கிடுறேன்.

பன்னீர்: என் தலைமையில இருக்குற அ.தி.மு.க-வை மீட்டெடுத்து, என்கிட்டயே திருப்பிக் கொடுக்கப்போறீங்க. ரொம்ப நல்லதும்மா. அம்மா சமாதியில நீங்க சத்தியம் செஞ்சப்போ, என்னைய ஒழிச்சுக் கட்டத்தான் சத்தியம் பண்ணுனீங்கன்னு தப்பா நினைச்சுட்டேன்.

சசிகலா: அட, நீங்க வேற... அக்கா மேல ஒரு துரும்புகூடப் படாம பாதுகாத்தவள் நான். மருத்துவமனையில அக்கா அன்கான்சியஸ்ல இருந்தப்போ, அவங்க அப்பாயின்மென்ட் வாங்காம டாக்டரைக்கூட பார்க்க அனுமதிச்சதில்லை. அப்படியிருக்கும்போது, சமாதி மேல கொசு உட்கார்ந்திருந்தா சும்மாவிடுவேனா... கொசுவை அடிக்கப்போய், அது சத்தியம்னு மாறிடுச்சு.

பன்னீர்: அப்புறம், அந்தக் கொசு தப்பிச்சிடுச்சாம்மா?

சசிகலா: ஆமாம், பன்னீர்... றெக்கை முளைச்ச கொசு அது. பறந்துடுச்சு... கட்சியும் கைவிட்டுப் போயிடுச்சு!”

பன்னீர்: வருத்தப்படாதீங்கம்மா. பிடிச்சுடலாம்!

சசிகலா: அந்தக் கொசுவையா பன்னீர்?

பன்னீர்: இல்லைம்மா, எடப்பாடிகிட்டருந்து கட்சியைனு சொன்னேம்மா. உங்க தியாகத்தையெல்லாம் எடப்பாடி மறந்துட்டாரேம்மா...

சசிகலா: அதுதான் நான் பண்ணின தப்பு. உங்களைவிட ரெண்டு டிகிரி அதிகமா முதுகு வளையுறாரே... நல்லா தவழ்ந்து வர்றாரேனு நான் நினைச்சது தப்பாப் போச்சு. கடைசியில என்னையவே ஓரங்கட்டிட்டாங்க. அக்காவோட ஆன்மா இதையெல்லாம் மன்னிக்காது!

பன்னீர்: போர் அடிக்குறப்பல்லாம் நானும் அம்மாவோட ஆன்மாகிட்ட பேசுவேன்ம்மா. ‘நீதான் பன்னீர் என் அரசியல் வாரிசு’னுகூட அம்மா ஆன்மா சொன்னுச்சு. ஆனா, என்னையைத் தவிர வேற யார் காதுலயும் விழலைங்கறதுனால, யாரும் அதை நம்பலை!

சசிகலா: 33 வருஷம் அக்காகூட பயணிச்ச என்னாலேயே இதை நம்ப முடியலேயே. சரி அதை விடுங்க, கட்சியை மீட்டெடுக்க 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் கிளம்பப் போறேன். நீங்களும் என்கூட வரணும்.

கற்பனை பகுதி: உங்களையே கட்சித் தலைவர் ஆக்கிடுறேன்! -  பன்னீருக்கு உத்தரவாதம் கொடுத்த சசி...

பன்னீர்: தெருவுக்காம்மா!

சசிகலா: அட, சுற்றுப்பயணத்துக்கு பன்னீர். தொண்டர்கள்தான் இந்தக் கட்சியோட உயிர்த்துடிப்பு. அவங்க எல்லாம் ஒரு மாற்றத்துக்கு ஏங்கி நிக்குறாங்க. சத்தியமா எனக்கு எந்தப் பதவி மேலயும் ஆசை கிடையாது. என்ன... என்னை நம்பி அக்கா ஒப்படைச்சுட்டுப்போன சொத்துகளைப் பாதுகாக்கவேண்டிய பெரிய பொறுப்பு இருக்குது. அதுக்காகவாவது கட்சியும் ஆட்சியும் எனக்கு வேண்டாமா?

பன்னீர்: உங்களை நான் பார்க்க வந்திருக்கேன்னு தெரிஞ்சாலே, என்னையக் கட்சில இருந்து நீக்கி, என் கையெழுத்து போட்டே அறிக்கை வந்துடும். உங்களுக்கென்ன கட்சிதானே வேணும்... ‘தி.மு.க-வை மீட்டெடுக்க அரசியல் பயணம். எம்.ஜி.ஆர் செய்யத் தவறியதை நான் செய்யப் போகிறேன்’னு அறிவிச்சுடுங்க. ‘தாய்க் கழகத்தை மீட்டெடுக்க வந்த தங்கத் தாயே’னு போஸ்டர் ஒட்டிடலாம்.

சசிகலா: இதுவும் நல்ல ஐடியாதான். ஆனா, தி.மு.க-வுல நான் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாதே பன்னீர். மக்கள் ஏத்துப்பாங்களா?

பன்னீர்: ஏன் ஏத்துக்க மாட்டாங்க? அ.தி.மு.க-வுல கூடத்தான் நீங்க அடிப்படை உறுப்பினர் கிடையாது. ‘கட்சியை மீட்டெடுப்பேன்’னு சொல்றது இல்லையா... தி.மு.க-வை நீங்க மீட்டெடுத்தா, தமிழ்நாட்டோட ரெண்டு பெரிய கட்சியும் நம்ம கட்டுப்பாட்டுலதான் இருக்கும்.

சசிகலா: ஒருவேளை திட்டம் சொதப்பிடுச்சுன்னா?

பன்னீர்: அதுக்கும் ஒரு ஐடியா வைச்சிருக்கேன்மா. ஓசூர் பார்டர்ல ரெண்டு ஏக்கர் இடம் வாங்குவோம். ‘இங்கு அனைத்துவிதமான ஆன்மாக்களுடன் பேசி, பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்’னு போர்டு மாட்டிடுவோம். நான் அல்ரெடி பாதி சாமியார்தான். நீங்க ஜெயில்ல கன்னடமும் கத்துக்கிட்டதால மொழிப் பிரச்னை இல்லை... பிசினஸ் பிச்சுக்கும்!

சசிகலா: சூப்பர் பன்னீர். நீங்க ரெண்டு ஏக்கர் இடத்தைப் பாருங்க... நான் தி.மு.க-வை மீட்டெடுக்க அறிக்கை தயார் பண்றேன்.

பன்னீர்: சரிம்மா... அதுல நானும் எடப்பாடியும் சேர்ந்தே கையெழுத்து போடுறோம்!

சசிகலா: பன்னீர்! என்ன பேசுறீங்க?

பன்னீர்: சாரிம்மா, பழக்க தோஷத்துல சொல்லிட்டேன்... நான் பின்வாசல் வழியா அப்படியே கிளம்புறேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism