Published:Updated:

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி? - தாமத கட்டணத்துடன் இணைக்க மார்ச் 31 கடைசிநாள்!

ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு இணைக்க மார்ச் 31 கடைசி தேதி!

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க பலமுறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது தாமதக் கட்டணத்துடன் இணைக்கப்படுவதற்கும் மார்ச் 31-ம் தேதி கடைசியாகும். ஆதாருடன் இணைக்கப்படாத பான் 1.4.2023 முதல் செயலிழந்துவிடும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

பான் எண்ணை ஆதாருடன் இணைக்க ஏற்கெனவே காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. மார்ச் 31, 2022 க்கு பின்னர் ஜூன் 30, 2022 வரை பான்-ஆதார் இணைப்பு செய்தவர்கள் ரூ.500 தாமதக் கட்டணமாக செலுத்தி வந்தனர். அடுத்து, ஜூன் 30, 2022-க்குப் பிறகு மார்ச் 31, 2023 வரை இப்போது பான்-ஆதார் இணைப்பு செய்ய ரூ.1,000 தாமதக் கட்டணமாகவும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வருமான வரித்துறை, தாமதக் கட்டணம் செலுத்தி பான் எண்ணை ஆதாருடன் இணைக்க 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிதான் கடைசி தேதி என தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ``வருமான வரிச் சட்டம், 1961-ன்படி அனைவரும் தனது பான் எண்ணை 31.03.2023-க்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதாருடன் இணைக்கப்படாத பான் 1.4.2023 முதல் செயலிழக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

இந்த ட்விட்டில், ``2017-ம் ஆண்டு மே 11-ம் தேதி வெளியாகிய அறிவிப்பு எண் 37/2017-ல் பட்டியிலிடப்பட்டவர்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள்" என்று கூறப்பட்டுள்ளது. கெடுதேதி தாண்டிய பிறகு பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது, பான் செயலிழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமதக் கட்டணம் செலுத்திய பின்னர்தான் ஆதார் எண்ணுடன் பான் இணைக்க முடியும் என்பதால் முதலில் கட்டணம் செலுத்தும் வழிமுறையையும் அதன் பின்னர் இணைக்கும் வழிமுறையையும் பார்ப்போம்.

ஆதார் பான் இணைந்த ஒரே டிஜிட்டல் அடையாள எண்
ஆதார் பான் இணைந்த ஒரே டிஜிட்டல் அடையாள எண்

அபராதம் செலுத்தும் வழிமுறைகள்:

  • அபராதம் செலுத்துவதற்கு முன்பு பான் எண், ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணை சரிபார்ப்பது மிக அவசியம்.

  • tin.egov-nsdl.com என்ற இணையதளத்தில் உள்ள non-TDS/TCS category Challan no./ITNS 280-ல் proceed ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

  • தற்போது திறக்கும் வலைப்பக்கத்தில் உள்ள ‘Tax applicable - (0021) - Income tax (other than companies)’ மற்றும் type of payment ‘500 (other receipts)’-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • இதன்பிறகு பான் எண், வீட்டு முகவரி, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தேவையான தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • கடைசியாக captcha-வை பதிவிட்டு, proceed ஆப்ஷனை அழுத்தி அபராதம் செலுத்திக் கொள்ளலாம்.

  • அபராதம் கட்டிய 4 - 5 நாள்களுக்குப் பிறகே ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் வழிமுறைகள்

வருமான வரித்துறை இணையதளமான eportal.incometax.gov.in முதலில் செல்ல வேண்டும்.

Home-ஐ க்ளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். அதன் இடதுபுறத்தில் உள்ள Link Aadhaar என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி? - தாமத கட்டணத்துடன் இணைக்க மார்ச் 31 கடைசிநாள்!

க்ளிக் செய்த உடன் புதிதாக ஒரு பக்கம் திறக்கப்பட்டிருக்கும்.

அதில் கொடுக்கப்பட்டுள்ள முதல் கட்டத்தில் உங்களது பான் எண்ணை நிரப்ப வேண்டும். இரண்டாவது கட்டத்தில் ஆதார் எண்ணை நிரப்ப வேண்டும்.

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது எப்படி? - தாமத கட்டணத்துடன் இணைக்க மார்ச் 31 கடைசிநாள்!

அதில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்டெப்ஸ் படி, வரிசையாக விபரங்களை பதிவு செய்யுங்கள். ஆதாரில் உங்களது பெயர் எப்படியிருக்கிதோ அதனை அப்படியே எழுத வேண்டும்.

கொடுக்கப்பட்டிருக்கும் கேப்சா கோடை (captacha code) சரியாக நிரப்புங்கள். கேப்சா கோடை பயன்படுத்த விரும்பாதவர்கள் ஒன் டைம் பாஸ்வேர்டு வசதியை பயன்படுத்தலாம்.

விபரங்களை நிரப்பிட்டு லிங்க் ஆதார் என்ற பட்டனை அழுத்தினால் உங்களது ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுவிடும்.