Published:Updated:

தஞ்சாவூர் : ``திட்டமிட்டு என் மனைவியைப் பழிவாங்குகிறார்கள்’’ போலீஸ்மீது வழக்கறிஞர் குற்றச்சாட்டு

போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது புகார் கூறும் செந்தில்குமார்
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது புகார் கூறும் செந்தில்குமார் ( ம.அரவிந்த் )

ஒரத்தநாடு, திருவோணம் காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக இருந்த சுப்ரமணியன் சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`ஒரத்தநாடு அருகே இளைஞர் ஒருவரின் தற்கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் துணையாக நின்றதால், போலீஸாகப் பணிபுரியும் என் மனைவியைக் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பழிவாங்கி சம்பளம் கிடைக்காமல் செய்துவிட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக அவர் இதைச் செய்திருக்கிறார். இதனால் என் மனைவி பாதிக்கப்பட்டிருக்கிறார்’ என வழக்கறிஞர் ஒருவர் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் ராஜேஸ்வரி
போலீஸ் ராஜேஸ்வரி

இது குறித்து வழக்கறிஞர் செந்தில்குமாரிடம் பேசினோம். ``ஒரத்தநாடு அருகேயுள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இரிது மகன் வினோத்குமார். இவரும் வைத்திலிங்கத்தின் சம்பந்தி குணசேகரனும் அதே பகுதியில் அருகருகே வசித்துவந்தனர். இந்தநிலையில் நிலம் தொடர்பாக இருதரப்புக்கும் பிரச்னை இருந்ததுவந்தது. இதையடுத்து குணசேகரன், வைத்திலிங்கத்தின் மருமகன் டாக்டர் கார்த்திகேயன், வைத்திலிங்கத்தின் அக்கா மகன் ஏட்டு என்கிற ஆனந்தன் ஆகியோர் வினோத்திடம் பிரச்னை செய்திருக்கின்றனர்.

இதில் மனமுடைந்த வினோத் கடந்த பிப்ரவரி மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதை ஒரத்தநாடு மற்றும் திருவோணம் காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக இருந்த சுப்ரமணியன் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வினோத்தின் உறவினர்கள் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் என்ற முறையில் நானும் பாதிக்கப்பட்ட வினோத் தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டேன்.

தனியார் பார்; இடிக்கப்பட்ட பேருந்து நிலையச் சுவர்?!-வைத்திலிங்கம் உறவினரால் சர்ச்சை! என்ன நடந்தது?
வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

இதை மனதில் வைத்திருந்த இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், அதன் பிறகு என் மனைவியைப் பணிரீதியாகத் தொந்தரவு செய்யத் தொடங்கினார். வினோத் வழக்கில் வைத்திலிங்கம் சொல்வதைக் கேட்டு , சுப்ரமணியன் வினோத் குடும்பத்துக்கு நான் ஆதரவாக நின்றேன் என்பதற்காக என்னை வேறுவிதமாக மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். அதன் பிறகு பணிக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது விபத்து ஏற்பட்டதால் முறைப்படி தகவல் கொடுத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் ராஜேஸ்வரியிடம் ஸ்டேட்மென்ட் வாங்க சுப்ரமணியன் யாரையும் அனுப்பவில்லை. நாங்கள் எங்களது நிலையை போஸ்ட் தபாலிலும் அனுப்பிவைத்தோம் அதையும் மறைத்துவிட்டார். மேலும் ஸ்டேஷனில் நடைபெற்ற பெட்டிஷன் மேளாவில் வழக்கறிஞர் என்ற முறையில் கலந்துகொண்டேன் இவை அனைத்தையும் சேர்த்து என் மனைவி மீது புகார் அனுப்பிவிட்டார். இதனால் கடந்த இரண்டு மாதங்களாக என் மனைவிக்குச் சம்பளம் வரவில்லை. அத்துடன் பணி மாறுதலுக்கும் ஆளாக்கப்பட்டு அவதிப்பட்டுவருகிறார். காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், வைத்திலிங்கம் தரப்புக்கு ஆதரவாகவும் இதை போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்தார் என்பதற்கு என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன.

வக்கீல் செந்தில்குமார்
வக்கீல் செந்தில்குமார்

இந்தநிலையில் கடந்த வாரம் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியனும் இடமாறுதல் செய்யப்பட்டு திருவையாறு பகுதிக்குச் சென்றுவிட்டார். நான் திமுக-வில் வழக்கறிஞர் அணியில் ஒரத்தநாடு ஒன்றியத்தின் முன்னாள் துணை அமைப்பாளராக இருந்தவன். வைத்திலிங்கம் தரப்புக்கு எதிராக நின்றேன் என்ற ஒரே காரணத்துக்காக இன்ஸ்பெக்டர் என்னை ஒன்றும் செய்ய முடியாமல் அவரது தலைமையில் பணி செய்த எனது மனைவியைப் பழிவாங்கிவிட்டார். பல மாதங்களாக, பல அழுத்தங்கள் தந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதுடன் சம்பளம் வராத அளவுக்குச் செய்துவிட்டார். இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளுக்குப் புகார் அனுப்பவிருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் சுப்ரமணியனிடம் பேசினோம். ``செந்தில்குமாருக்கும் அவரின் மனைவி ராஜேஸ்வரிக்கும் அடிக்கடி சண்டை வரும். ஸ்டேனுக்கே வந்து பல முறை ராஜேஸ்வரியை அடித்திருக்கிறார். அதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளன. தனது மனைவியை வேலை செய்யவே விட மாட்டார். மேலும் ராஜேஸ்வரி மீதும் பல்வேறு புகார்கள் வரும். ஸ்டேஷனில் நடைபெற்ற மனுக்கள் மேளாவுக்கு சம்பந்தமே இல்லாமல் வந்து அநாகரிகமாக நடந்துகொண்டார். அதன் அடிப்படையிலேயே அவர்மீது புகார் அனுப்பப்பட்டது. நான் நடுநிலையோடு செயல்பட்டு வந்திருக்கிறேன். செந்தில் சொல்வது முற்றிலும் பொய்" எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு