Published:Updated:

அந்த 40 கோடி ரூபாய்... தி.மு.க-வின் மாஸ்டர் பிளான்?

ஒரே வேட்பாளருக்கு தி.மு.க ஒரு கணக்கையும், சம்பந்தப்பட்ட வேட்பாளர் வேறு கணக்கையும் காட்டியுள்ளது முரண்பாடாக இருக்கிறது.

dmk
dmk

'அது மக்கள் நலக் கூட்டணியல்ல... பண நலக் கூட்டணி' - கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி அமைத்துக்கொண்டபோது, தி.மு.க தலைவர் ஸ்டாலின் உதிர்த்த வார்த்தைகள் இவை. ஆனால், தேர்தல் செலவுகளுக்காக கம்யூனிஸ்ட்கள், கொ.ம.தே.க உள்ளிட்ட தன் கூட்டணிக் கட்சிகளுக்கு 40 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்திருக்கிறது அதே தி.மு.க. தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க சமர்ப்பித்திருக்கும் பிரமாணப் பத்திரம் மூலம் இந்தத் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பிரமாணப் பத்திரத்தை விரிவாகப் புரட்டினோம். மேலும் படிக்க... http://bit.ly/2nYdjXk

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 15 கோடி ரூபாய், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 கோடி ரூபாய், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 15 கோடி ரூபாய் தேர்தல் செலவுகளுக்காகக் கொடுத்ததாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது தி.மு.க. அதேபோல, தி.மு.க வேட்பாளர்கள் 23 பேருக்கு தலா 50 லட்சம் ரூபாய், ஸ்டாலின் பிரசாரத்துக்கு 58,93,000 ரூபாய் உட்பட சுமார் 79 கோடி ரூபாயை, தேர்தல் செலவாகக் காட்டியுள்ளது தி.மு.க. தற்போது நாமக்கல் எம்.பி-யாக இருக்கும் கொ.ம.தே.க-வின் ஏ.கே.பி.சின்ராஜ், உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார். அதன் காரணமாகவே சின்ராஜுக்கு 50 லட்சம் ரூபாய் கொடுத்ததாக தி.மு.க கூறியுள்ளது. தி.மு.க கூட்டணியில் கொ.ம.தே.க-வுக்கு ஒதுக்கப்பட்டது நாமக்கல் தொகுதி மட்டுமே. இதை தவிர்த்து கொ.ம.தே.க-வுக்கு 15 கோடி ரூபாயை வழங்கியுள்ளது தி.மு.க.

தி.மு.க கொடுத்ததாகச் சொல்லும் 10 கோடி ரூபாய் குறித்து எந்தத் தகவலும் அதில் இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, செலவு விவரங்களை இன்னும் தாக்கல் செய்யவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமாரும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டார். அவருக்கும் 50 லட்சம் ரூபாய் வழங்கியதாக தி.மு.க கூறியுள்ளது. ஆனால், ரவிக்குமார் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தி.மு.க-விடமிருந்து 10 லட்சம் ரூபாயும், விடுதலைச் சிறுத்தைகளிடமிருந்து 50 லட்சம் ரூபாயும் பெற்றதாகக் கூறியுள்ளார். ஒரே வேட்பாளருக்கு தி.மு.க ஒரு கணக்கையும், சம்பந்தப்பட்ட வேட்பாளர் வேறு கணக்கையும் காட்டியுள்ளது முரண்பாடாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், இந்தியா முழுவதுமே எட்டு கோடி ரூபாய்தான் தேர்தல் செலவு செய்ததாகக் கூறியுள்ளது. தமிழகத்தில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பி.ஆர்.நடராஜன், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சு.வெங்கடேசன் இருவரின் ஒட்டுமொத்த செலவே 81 லட்சம் ரூபாய்தான் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க கொடுத்ததாகச் சொல்லும் 10 கோடி ரூபாய் குறித்து எந்தத் தகவலும் அதில் இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, செலவு விவரங்களை இன்னும் தாக்கல் செய்யவில்லை. ஆனால், அதன் வேட்பாளர்கள் தங்கள் செலவுகளை தாக்கல் செய்துவிட்டனர். அந்தக் கட்சியின் திருப்பூர் வேட்பாளர் சுப்பராயன், தி.மு.க-விடமிருந்து நான்கு லட்சம் ரூபாய் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தி.மு.க கொடுத்தது 15 கோடி ரூபாய்.

dmk
dmk

ஜனநாயகம், பணநாயகமாக மாறிவரும் தேர்தல் கலாசாரத்தில், ஆளும் அ.தி.மு.க., பா.ஜ.க அரசுகளை எந்த விஷயத்தில் தி.மு.க-வினர் தாக்கிப் பேசினார்களோ... அதே வழிமுறையை தி.மு.க-வும் பின்பற்றியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. `தேர்தலுக்காக கோடிக்கணக்கில் குவிந்த பணத்தை, இப்படி கணக்குக் காண்பித்து பணத்தை வெள்ளையாக்கிவிட்டது தி.மு.க' என்ற பேச்சு, அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. தவிர, தேர்தலில் தி.மு.க-வின் பலம் தெரிந்துவிட்டதால், கூட்டணிக் கட்சிகளைக் கழற்றிவிடுவதற்காகவும் இப்படிச் செய்திருக்கலாம் என்றும் ஒருசாரார் கூறுகின்றனர்.

- சரி, இந்த சர்ச்சையில் சம்பந்தப்பட்ட தி.மு.க. கூட்டணிக் கட்சி தரப்பினர் சொல்வது என்ன? தி.மு.க. கூறும் விளக்கம்தான் என்ன? - ஜூனியர் விகடன் இதழில் விரிவாக வாசிக்க > 40 கோடி ரூபாய் நன்கொடை... தேர்தல் செலவா, லஞ்சமா? https://www.vikatan.com/government-and-politics/controversy/controversy-on-dmk-alliance-about-rs-40-crore-donation-issue

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான

325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2mjxazv |