Published:Updated:

நடக்குறது அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?

அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?
அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?

இந்தக் குழப்பம் தீர ஒரே வழிதான். 'எனது தலைமையிலான ஆட்சி'னு அம்மா சொன்ன மாதிரி நீங்களும் 'என் வழி தனி வழி'னு சொல்லிடுங்க. யார் எதிர்த்து கேள்விக் கேட்கப்போறா?

'தமிழ்நாட்டில் நடப்பது அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?'னு ஒரே குழப்பமா இருக்குதுங்க. உதய் மின் திட்டத்தை அம்மா எதிர்த்தாங்க. ஆனா, 'அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி'னு மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்ற நீங்க அதை ஏத்துக்கிட்டீங்க. 'நீட்' தேர்வை அம்மா எதிர்த்தாங்க. ஆனா, அதே அம்மா வழியில(!) ஆட்சி செய்யற நீங்க அதை ஆதரிக்கிறீங்க.

இயற்கை எரிவாயு (கெயில்) திட்டத்தை அம்மா முதலில் அனுமதிச்சாலும், பிறகு விவசாயிகளோட வேதனைக் கண்ணீரைப் பார்த்துட்டு தடுத்தாங்க. `நெடுஞ்சாலை ஓரமா கொண்டு போங்க'னு மாற்றி அறிவிச்சாங்க. ஆனா, நீங்க ஒண்ணும் பேச மாட்டேங்குறீங்க. ஜி.எஸ்.டி வரி விதிப்பை அம்மா எதிர்த்தாங்க. நீங்க மண்டிபோட்டு ஏத்துக்கிட்டீங்க. பிறகு, 'மத்திய அரசு எல்லா வரியையும் வாங்கிக்கிட்டு, தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய பங்குத் தொகையைக் கொடுக்க மாட்டேங்குது'னு கண்ணீர் வடிக்கிறீங்க.

நடக்குறது அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா?

இப்படி ஒவ்வொரு செயல்லயும் அம்மா ஆட்சிக்கும் உங்க ஆட்சிக்கும் ஏகப்பட்ட முரண்பாடு இருக்குது. இதுல, `அம்மா ஆட்சி'னு சொல்லிக்கிறதுல மட்டும் குறைச்சலில்லை. இப்போ எங்களுக்கு ஒரு சந்தேகம்... ஏற்கெனவே சொன்ன மாதிரி, பல திட்டங்களை அம்மா எதிர்த்தாங்க. அதே திட்டங்களை நீங்க ஆதரிக்கிறீங்க. இதுல யார் செய்யறது சரி? நீங்க செய்யறதுதான் சரின்னு சொன்னா, அப்போ அம்மா தவறான முடிவு எடுத்துட்டாங்களா? இல்லை, அம்மா செஞ்சதுதான் சரின்னு சொன்னா, அப்போ நீங்க எடுத்தது தவறான முடிவா? இதுவே பெரிய குழப்பமா இருக்குது.

இந்தக் குழப்பம் தீர ஒரே வழிதான். 'எனது தலைமையிலான ஆட்சி'னு அம்மா சொன்ன மாதிரி நீங்களும் 'என் வழி தனி வழி'னு சொல்லிடுங்க. யார் எதிர்த்து கேள்விக் கேட்கப்போறா? அதை விட்டுட்டு பேச்சுக்குப் பேச்சு `அம்மா ஆட்சி'னு சொல்லிக்கிட்டு எல்லாரையும் குழப்பாதீங்க சாமி.

- 'உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் விவசாயிகளுக்கு அடையாளமாகக் காட்டிய பச்சைத் துண்டை உங்கள் தலையில் உருமாகட்டி, உழவன் மகனாகக் கம்பீரமாகக் காட்சி தரும் `எங்கள் தங்கம்' தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கு மீண்டும் கோவணாண்டியின் வணக்கமுங்க...'

என்று தொடங்கும் கோவணாண்டியின் கடிதத்தை முழுமையாக ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க.. https://bit.ly/2WInKgr > நடக்குறது அம்மா ஆட்சியா... அமித் ஷா ஆட்சியா? - முதல்வர் எடப்பாடிக்கு கோவணாண்டியின் கடிதம் https://bit.ly/2WInKgr

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு