Published:Updated:

சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டம் நிறுத்தம்!- ஜெகன் மோகனின் நடவடிக்கைக்கு என்ன காரணம்?

கார்க்கிபவா

போலவரம் திட்டம் ஆந்திராவின் பல நாள் கனவுத் திட்டம். அதைச் சந்திரபாபு நாயுடு தன்னுடைய உச்சபட்ச சாதனையாகச் சொல்லியிருந்தார்.

போலவரம் திட்டம்
போலவரம் திட்டம்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தனது அதிரடி உத்தரவுகளால் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறார். குறிப்பாக, முன்னாள் முதல்வர் சந்திரபாபுவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அனல் பறக்கிறது. இப்போது, அப்படி இன்னொரு உத்தரவை ஆந்திர அரசு அறிவித்திருக்கிறது.

ஜெகன் மோகன்
ஜெகன் மோகன்

போலவரம் திட்டம் ஆந்திராவின் பல நாள் கனவுத் திட்டம். அதைச் சந்திரபாபு நாயுடு தன்னுடைய உச்சபட்ச சாதனையாகச் சொல்லியிருந்தார். முழுவதுமாக அந்தத் திட்டம் முடியும் முன்னரே அதற்கு ஒரு மாற்று ஏற்பாடும் செய்திருந்தார் சந்திரபாபு. இப்போது அந்த புராஜெக்ட்டின் முக்கியமான ஒப்பந்ததாரரான நவயுக இன்ஜினீயரிங் கம்பெனிக்குத் தந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்திருக்கிறார் ஜெகன். டெண்டர் விட்டதில் முறைகேடுகள் நடந்ததால் இந்த முடிவு என ஆந்திர அரசின் நீர்வளத்துறை அறிவித்திருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் கடந்த ஜூன் மாதம் இந்தத் திட்டம் பற்றியும் டெண்டர்கள் பற்றியும் ஆராயக் குழு ஒன்றை அமைத்திருந்தார் ஜெகன். அவர்கள் தந்த முடிவின்படி 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் இப்போது ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

"நதிகளை இணைத்துவிட்டார் சந்திரபாபு" என 2017-ல் நிறைய வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் வந்தபோது உண்மையை அறிய விகடன் நிருபர்கள் ஆந்திராவுக்குச் சென்றிருந்தார்கள். போலவரம் திட்டம் பற்றி 2017-ம் ஆண்டே குறுந்தொடர் ஒன்றை விகடன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். அப்போது நம்மிடம் பேசிய விவசாயிகள் பலரும் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்கள்.

Vikatan

ஜெகன் அரசின் இந்த முடிவால் போலவரம் திட்டம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. புதிதாக டெண்டர் விடப்பட்டு பின்னர் பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,