Published:Updated:

மேலிடத்தை நெருங்க முடியலை!" - ஐபேக் மீது உடன்பிறப்புகள் கடும் அதிருப்தி

ஸ்டாலின்
ஸ்டாலின்

நாமெல்லாம் ஐபேக் நிர்வாகிகளைத் தாண்டி கட்சி மேலிடத்தை நெருங்க முடியலை. சுதந்திரமா ஒரு கட்சி வேலைகூடச் செய்ய முடியலை. ரொம்ப டார்ச்சர் பண்றாங்க

''தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தரப்பு நடத்திய ஒரு சர்வேயில், 'பா.ஜ.க-வுடன் சேர்ந்து தேர்தலைச் சந்தித்தால் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்திக்கும்' என்று முடிவுகள் வந்தனவாம். இதனால் பா.ஜ.க-வை தேர்தல்வரை சமாதானம் செய்து சமாளிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்கள்" என்று ஆரம்பித்தார் கழுகார்.

"தி.மு.க தரப்பும் தேர்தல் வேலைகளில் ஜரூர் காட்ட ஆரம்பித்துவிட்டதே?"

"அனைத்து தி.மு.க மாவட்ட நிர்வாகிகளுக்கும் இரண்டு பட்டியல்களுடன், சுற்றறிக்கைகளையும் ஐபேக் நிறுவனம் அனுப்பியுள்ளது. கட்சியில் பொறுப்பில் இல்லாத பழைய நிர்வாகிகள், ஒவ்வோர் ஊரிலும் இருக்கும் பிரபலமான நபர்கள், தி.மு.க ஆதரவு தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களின் விவரங்களைப் பட்டியலில் எழுதி தலைமைக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்.

தி.மு.க தலைவர் அந்த நபர்களுடன் விரைவில் கலந்துரையாடுவார் என்று சுற்றறிக்கையில் கூறியிருக்கிறார்களாம். மேலும், அந்தச் சுற்றறிக்கையில் கட்சியினருக்கு வேறு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளனவாம்!"

"சரிதான்..."

"இதை முன்வைத்துத்தான் அ.தி.மு.க-வுக்காகப் பின்னணியில் வேலை செய்துவரும் சுனில் டீமைப் பார்த்துப் பொறாமையில் பொங்குகிறார்களாம் உடன்பிறப்புகள்.

'இங்க நாமெல்லாம் ஐபேக் நிர்வாகிகளைத் தாண்டி கட்சி மேலிடத்தை நெருங்க முடியலை. சுதந்திரமா ஒரு கட்சி வேலைகூடச் செய்ய முடியலை. ரொம்ப டார்ச்சர் பண்றாங்க. ஆனா, அ.தி.மு.க-வுல பாருங்க... சுனில் ஆளுங்க ஐடியா கொடுக்கற தோட நிறுத்திக்கிறாங்க. கட்சி நிர்வாகிகள்கிட்ட மரியாதையாவும் பக்குவமாகவும் பேசுறாங்க... கட்சி விஷயங்கள்ல தலையிடுறதில்லை' என்கிறார்களாம்."

"இக்கரைக்கு அக்கரை பச்சைதான்!"

"ராஜஸ்தான்போல பாண்டிச்சேரியிலும் பகடைக் காய்களை உருட்ட ஆரம்பித்துவிட்டது பா.ஜ.க. காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதால், அதைத் தங்களுக்குச் சாதகமாக்கி, காங்கிரஸையே இரண்டாக உடைக்கத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறதாம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அமைச்சரும், சில எம்.எல்.ஏ-க்களும் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டுகிறார்களாம்.

இந்தத் திட்டம் தெரிந்ததால் தான் அதிருப்தி எம்.எல்.ஏக்களில் ஒருவரான தனவேலுவை கட்சித்தாவல் சட்டத்தின்கீழ் அதிரடியாகத் தகுதிநீக்கம் செய்திருக்கிறதாம் காங்கிரஸ்" என்ற கழுகார், "ரஜினி கூட்டணி சம்பந்தமாக சிலருடன் பேச ஆரம்பித்திருக்கிறார். அவரது போனில் பல தலைவர்களின் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது" என்றார்.

பன்னீர் செல்வம் - பழனிசாமி
பன்னீர் செல்வம் - பழனிசாமி

மேலும், "ஒரு மூத்த அமைச்சரை சந்தித்துவிட்டு வருகிறேன். 'ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரிய பிரளயம் வெடிக்கக்கூடும்' என்றார் அந்த அமைச்சர்" என்றபடி கழுகார் பகிர்ந்த மொத்த தகவல்களையும் ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > மிஸ்டர் கழுகு: எடப்பாடிக்கு எதிராக 14 அமைச்சர்கள் போர்க்கோலம்! https://bit.ly/2Wle9M5

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

மிஸ்டர் கழுகு: எடப்பாடிக்கு எதிராக 14 அமைச்சர்கள் போர்க்கோலம்!

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு