Published:Updated:

``பாஜக-விலிருந்து எங்களுடன் சேர வரிசையில் நிற்கிறார்கள்..!" - திரிணாமுல் எம்.பி அபிஷேக் பானர்ஜி

அபிஷேக் பானர்ஜி ( ட்விட்டர் )

"யாரெல்லாம் திரிணாமுல் காங்கிரஸை மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேற்ற நினைத்தார்களோ அவர்கள் தற்போது வங்காளத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்." - அபிஷேக் பானர்ஜி

``பாஜக-விலிருந்து எங்களுடன் சேர வரிசையில் நிற்கிறார்கள்..!" - திரிணாமுல் எம்.பி அபிஷேக் பானர்ஜி

"யாரெல்லாம் திரிணாமுல் காங்கிரஸை மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேற்ற நினைத்தார்களோ அவர்கள் தற்போது வங்காளத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்." - அபிஷேக் பானர்ஜி

Published:Updated:
அபிஷேக் பானர்ஜி ( ட்விட்டர் )

மேற்கு வங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன் சிங் பா.ஜ.க-விலிருந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு மேற்கு வங்கத்தின் பாரக்பூரில் வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்ட திரிணாமுல் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, ``பா.ஜ.க-விலிருந்து எங்களுடன் சேர வரிசையில் நிற்கிறார்கள். அவர்களின் பட்டியல் வேண்டுமா? யாரெல்லாம் திரிணாமுல் காங்கிரஸை மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேற்ற நினைத்தார்களோ அவர்கள் தற்போது வங்காளத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.

அபிஷேக் பானர்ஜி
அபிஷேக் பானர்ஜி
ட்விட்டர்

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-விலிருந்து மாற விரும்புகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கிரீன் சிக்னல் கொடுக்கும் நாளில், பா.ஜ.க-விலிருந்து ஏராளமான எம்.பி-க்கள் திரிணாமுல் காங்கிரஸில் சேருவார்கள். மேலும், சிட்பண்ட் மோசடியாளர் சுதீப்தா சென்னுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மதன் மித்ராவை கைதுசெய்ய முடியுமானால், நீரவ மோடியுடன் மேடையிலிருந்ததற்காக பிரதமரை ஏன் கைதுசெய்யவில்லை" என்று பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism