Published:Updated:

“சீனாவிடம் கையேந்தத் தேவையில்லை!”

அபயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
அபயகுமார்

மருந்து உற்பத்தியாளர் அபயகுமார் நேர்காணல்

“சீனாவிடம் கையேந்தத் தேவையில்லை!”

மருந்து உற்பத்தியாளர் அபயகுமார் நேர்காணல்

Published:Updated:
அபயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
அபயகுமார்
இந்திய-சீன எல்லையில் ஆரம்பித்திருக்கும் போர்ப் பதற்றம், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மருந்து உற்பத்தியில் முன்னணியிலிருக்கும் இந்தியா, அதற்கான மூலப்பொருள்களுக்கு சீனாவையே நம்பியிருக்கிறது. ஒருவேளை இந்த மூலப்பொருள்களை சீனா தடை செய்தால் என்னவாகும்? மருந்து உற்பத்தித் துறையில் அனுபவம்மிக்க ஷாசன் பார்மா நிறுவனத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான எஸ்.அபயகுமாருடன் உரையாடினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘மருந்து மூலப்பொருள்களுக்கு சீனாவை விட்டால் நமக்கு வேறு வழியே இல்லையா?”

அபயகுமார்
அபயகுமார்

‘‘கடந்த 1976-ம் ஆண்டிலிருந்தே மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருள்களில் 90 சதவிகிதத்தை சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்கிறோம். 10 சதவிகிதத்தைத்தான் உள்ளூரில் தயாரிக்கிறோம். சீனாவிடமிருந்து மலிவான விலையில் மூலப்பொருள்கள் கிடைத்ததாலும், அதிக இறக்குமதி செய்ததாலும் இந்தியா பார்மா துறையில் வளர்ச்சியடைந்தது. அதனாலேயே உலக நாடுகளின் மருந்தகமாகவும் இந்தியா திகழ்கிறது. அதேசமயம் இந்தத் துறையில் சீனாவை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்பதற்காகத்தான் மத்திய அரசு 2015-ல் சில நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும், அவை பலன் தரவில்லை.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“அப்படியென்றால் வேறு வழியே இல்லையா?”

“இருக்கிறது... கடந்த 2018-ம் ஆண்டில், சீனாவில் ஏழு மருந்துத் தொழிற்சாலைகள் தீ விபத்தால் அழிந்துவிட்டன. இதனால் அப்போது மூலப்பொருள்கள் கிடைக்கவில்லை. இந்திய நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன. அப்போதுதான் எங்கள் நிறுவனம், ‘இனி சீனாவைச் சார்ந்திருக்கக் கூடாது’ என்று முடிவு செய்தது. மருந்து ஆராய்ச்சிக் குழுவினர் உதவியுடன், நீண்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு எங்களுக்குத் தேவையான மூலப்பொருள்களை நாங்களே உற்பத்தி செய்துகொள்கிறோம். இதுபோல அனைத்து நிறுவனங்களும் ஆராய்ச்சியைத் தொடங்கி, மூலப்பொருள் களையும் உற்பத்தி செய்தால், சீனாவை நம்பியிருக்க வேண்டியதில்லை.”

“ஆனால், சீனா மலிவான விலைக்கு மூலப்பொருள்களைத் தருகிறது என்று சொன்னீர்களே... விலை கட்டுப்படி ஆகிறதா?”

 “சீனாவிடம் கையேந்தத் தேவையில்லை!”

“விலை விஷயத்தில் ஆரம்பத்தில் எங்களுக்குச் சில சறுக்கல்கள் இருந்தனதான். ஆனால், இப்போது சீனாவிடமிருந்து இறக்குமதி செய்த விலையைவிடக் குறைந்த விலையிலேயே உற்பத்தி செய்கிறோம். தற்போது இந்திய அரசு மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருள்களை உற்பத்தி செய்ய 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. சீனாவின் பொருள்களை இந்தியாவில் தயாரிப்பதற்கு 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை அரசு இன்சென்டிவ் வழங்குகிறது. இதனால் வருங்காலத்தில் சீனாவின் மீதான சார்பை நம்மால் முற்றிலுமாகக் குறைக்க முடியும்.’’

“பல துறைகளிலும் நாம் சீனாவைச் சார்ந்தே இயங்கிக் கொண்டிருக்கிறோமா?”

“முன்பைவிட நிலைமை மாறிவிட்டது. சீனாவி லிருந்து ஒவ்வொரு மாதமும் 20-30 கன்டெய்னர்களில் டைல்ஸ் இறக்குமதி செய்துகொண்டிருந்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ராஜ்கோட்டில் டைல்ஸ் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கப்பட்ட பிறகு சீனாவிலிருந்து டைல்ஸ் இறக்குமதி செய்வது முற்றிலும் நின்றுவிட்டது. அதேபோல் ஹார்டுவேர் பொருள்களும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது குறைந்துவிட்டது. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக சுயச்சார்புக்கு மாறிவருகிறோம்.”

“ஆனால், உற்பத்தித்துறையைவிட சேவைத்துறையை நோக்கியே இந்தியர்கள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். இதனால்தான் நாம் சீனாவை நம்ப வேண்டியிருக் கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“சேவைத்துறையில் நாம் தொடர்ந்து வளர்ச்சியில் இருக்கிறோம். அதே சமயம் உற்பத்தித்துறையின் வளர்ச்சிக்கு என்னென்ன வசதிகளைச் செய்து தர முடியுமோ அதை அரசு செய்து தர வேண்டும். உதாரணமாக, பார்மா துறையிலுள்ள நெருக்கடிகளைப் புரிந்துகொண்டு அரசு செயல்பட வேண்டும். ஆனால், இந்தியாவில் உற்பத்திச் செயல்பாடுகளை மாற்றுவதற்காக அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கே நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இப்போதுதான் அரசு இந்தப் பிரச்னைகளையே புரிந்து கொண்டிருக்கிறது. அரசின் உதவி கிடைக்கும் பட்சத்தில் உற்பத்தித் துறையிலும் நம்மால் முன்னேற முடியும்.”

“கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியதால் உலக நாடுகள் அதன்மீது கடும் கோபத்தில் உள்ளன. உலக நாடுகளால் சீனாவை ஒதுக்கிவிட முடியுமா?”

“அப்படியெல்லாம் சீனாவை எளிதாக ஒதுக்கிவிட முடியாது. ஆனால், சீனாவுக்கு நிச்சயம் பயம் காட்ட முடியும். சீனப் பிரதமர், தான் உயிருடன் இருக்கும்வரை, தானே நிரந்தரப் பிரதமர் என்று முடிவு செய்துவிட்டார். இதற்கு சீனாவிலேயே எதிர்ப்பலை எழுந்துள்ளது. சீன தொழிற்சாலைகள் ஹாங்காங், பாங்காக் உள்ளிட்ட நகரங்களுக்கு நகரத் தொடங்கிவிட்டன. இந்த எதிர்ப்பலையை திசைதிருப்பவே அவர்கள் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்து கிறார்கள். ஆனால், இது அவர்களுக்கு நிரந்தர பலன் தராது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism