Published:Updated:

ராமதாஸ் பார்த்த திரைப்படங்கள்! கமென்ட்களில் நெட்டிசன்கள் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தான் பார்த்த படங்கள் பற்றி தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார். அவர் என்னன்ன படங்கள் பார்த்தார். நெட்டிசன்கள் அதற்கு சொன்ன கமென்ட்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்

ராமதாஸ் பார்த்த திரைப்படங்கள்! கமென்ட்களில் நெட்டிசன்கள் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?

பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தான் பார்த்த படங்கள் பற்றி தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகிறார். அவர் என்னன்ன படங்கள் பார்த்தார். நெட்டிசன்கள் அதற்கு சொன்ன கமென்ட்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்

Published:Updated:
பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் தான் பார்த்த படங்கள் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார். படங்களைப் பற்றிய ட்வீட்டில் அந்தப் படத்தின் கதையைச் சொல்லி, கடைசியாக ஒரு வரியில், நல்ல படம், சிறப்பான படம் என்பது போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால், மாறா, அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்கள; பார்த்துவிட்டு ராமதாஸ் செய்துள்ள ட்வீட்களின் பின்னூட்டங்களில் இணையதளவாசிகள், வேறு சில படங்களைச் சொல்லி 'இந்தப் படங்களையும் பாருங்க' எனப் பரிந்துரைத்து வருகின்றனர்.

பரியேறும் பெருமாள், ஜெய்பீம், அசுரன், சூரரைப் போற்று, புஷ்பா போன்ற படங்களைப் பார்த்துட்டு சொல்லுங்க எனக் கோரிக்கை வைக்கின்றனர். எங்க போனாலும் லிங்க் கேட்கும் நம்ம மக்கள் ராமதாஸ் பதிவிலும் 'படத்துக்கான 1080p டெலிகிராம் லிங்க் ஆங்கில சப்டைட்டிலுடன்' கேட்டு வைத்துள்ளனர். துப்பாக்கி படத்தின் காஜல், விஜய் இருக்கும் மீம் காட்சி ஒன்றைப் பகிர்ந்து "நீங்க ஏன் மூவி ரிவியூக்கு ஒரு யூ-ட்யூப் சேனல் தொடங்க கூடாது" எனப் பகடியாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். 20 வருடத்திற்கு முன் வந்த 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தை பற்றிய ட்வீட்டில் ராமதாஸ், "விரசமில்லாத உணர்வுமயமான சிறப்பான படம்" என்கிறார். அதற்கு மொழி படத்தில் உள்ள மீம் காட்சி ஒன்றை பகிர்ந்து, 'Mark my words, ஒரு நாள் பெரிய டைரக்டரா வருவார்' என மணிரத்னம் குறித்து ராமதாஸ் சொல்வதாக ஒருவர் பின்னூட்டமிட்டு இருக்கிறார். கலவையான விமர்சனங்கள் ராமதாஸின் பதிவுகளுக்கு வந்தவண்ணம் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism