Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு
கிசுகிசு

மாநகரில் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது பைக் ரேஸ். காக்கிதுறையின் தலைவர், இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே கடுமையாக இருந்ததால், அடங்கிக்கிடந்த பைக் ரேஸ் பார்ட்டிகள், திடீரென மீண்டும் கிளம்பியிருப்பதும், அவர்களுக்கு எதிராக எங்கேயுமே போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படாததும் ஆச்சர்யமாக இருக்கிறது. காக்கிதுறையின் தலைவரின் கரங்களே கட்டப்பட்டுவிட்டனவோ என்கிற அளவுக்குக் கிசுகிசு கிளம்பியிருக்கிறது. #உங்க சைக்கிளைக் கொஞ்சம் ஓரமா நிறுத்திட்டு, கொஞ்சம் பைக்குகளை கவனிங்க சார்!

கிசுகிசு

ஸ்ட்ராங்கான படத்தின் விநியோக உரிமையை வாங்கிய வாரிசுப்புள்ளி, பைக் நடிகரிடம் முதன்மையானவராக இருக்கும் தன் தந்தையைப் பார்த்து பொக்கே கொடுக்கும்படி கோரிக்கை வைத்தாராம். ‘அரசியல்ரீதியான சந்திப்பாக அமைந்துவிடும். அதனால், என்னால் அப்படிச் செய்ய முடியாது’ என முகத்தில் அடித்தாற்போல் சொல்லி அனுப்பினாராம் பைக் நடிகர். ‘இந்த விவகாரத்தால், கணக்கு வழக்கில் விளையாடி விடுவார்களோ’ எனப் பதறிக்கிடக்கிறார் படத்தின் மும்பைத் தயாரிப்பாளர். #விளையாடு மங்காத்தா..!

கிசுகிசு

கடந்த ஆட்சியில்தான் கற்பிக்கும் துறையின் அமைச்சர், காலையில் ஓர் அறிவிப்பு மாலையில் மறு அறிவிப்பு எனக் குழப்பிக்கொண்டேயிருப்பார். ஆட்சி மாறினாலும் காட்சி மாறாததுபோல, இப்போதைய அமைச்சரும் நிமிடத்துக்கு நிமிடம் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேயிருக்கிறார். ‘முக்கியத் துறையில் ஒரு முடிவை எடுக்கும்போது, அதிகாரிகளிடம் உரிய முறையில் கலந்தாலோசிக்க வேண்டுமா இல்லையா?’ எனக் கோட்டை வட்டாரத்தில் குமுறல் அதிகமாகக் கேட்கிறது. #நிற்க அதற்குத் தக!

கிசுகிசு

எல்லாப் பக்கமும் கோல் போடும் மாண்புமிகுவாக மாறியிருக்கிறாராம் ‘வளமான’ மினிஸ்டர். முதன்மையானவர், இல்லத்தரசி, வாரிசு, தங்கை, மருமகன் என அத்தனை பக்கமும் ஆதரவு தேடிக்கொள்ளும் அமைச்சர், “என் துறையிலோ ஏரியாவிலோ என்ன வேலை என்றாலும் சொல்லுங்க… அதைச் செஞ்சு கொடுக்குறதுதான் என் முதல் வேலை” என்கிறாராம் மொத்தமாக மடங்கி. ‘பிழைக்கத் தெரிஞ்ச மனுஷன்’ எனப் பிற அமைச்சர்களே பிரமிக்கிறார்கள். #பாலும் பழமும் கைகளில் ஏந்தி...

கிசுகிசு

பரப்புரைக்குப் போன இடங்களிலெல்லாம், ‘மாதா மாதம் தருவதாகச் சொன்ன ஆயிரம் ரூபாய் எங்கே?’ எனப் பெண்கள் கேரோ செய்ய, திகைத்துப்போனாராம் ஆளும் அரசின் வாரிசுப்புள்ளி. ஒன்றிரண்டு இடங்களில் சமாளித்துக் கடந்தவர், பிற இடங்களுக்குச் செல்லும்போது, ‘என்னை நோக்கி யாரும் கேள்வி கேட்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள்’ எனக் கட்சி நிர்வாகிகளிடம் கறாராகச் சொல்லிவிட்டாராம். ‘கட்சிக்காரங்களை மட்டுமே நிறுத்தியா பரப்புரை பண்ண முடியும்?’ என நொந்துபோனார்களாம் லோக்கல் நிர்வாகிகள். #கடுப்பேத்துறாங்க மை லார்ட்!‘

கிசுகிசு

கூட்டணியைக் கழற்றிவிட்டதில் தன்னுடைய பங்கு என்று எதுவுமே கிடையாது’ என டெல்லி சோர்ஸிடம் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறாராம் இலைக் கட்சியின் பணிவானவர். முடிவெடுக்கும் அதிகாரம் தன்னிடம் இருந்திருந்தால் கூட்டணியை உறுதியாக்கி, ஒதுக்கீட்டையும் அதிகமாக்கியிருப்பேன் என்றாராம். ‘சீக்கிரமே முக்கியஸ்தரோடு நேரடிச் சந்திப்புக்கு நேரம் வாங்கித் தாருங்கள்’ என்றும் கோரிக்கை வைத்திருக்கிறாராம். #அந்த ஃபர்னிச்சரை ஒடைச்சது நான் இல்லீங்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism