Published:Updated:

திருச்செங்கோட்டை அதிரவைக்கும் அரசியல் குஸ்தி!

பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ Vs சின்ராஜ் எம்.பி
பிரீமியம் ஸ்டோரி
News
பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ Vs சின்ராஜ் எம்.பி

பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ Vs சின்ராஜ் எம்.பி

சமீபத்தில் நாமக்கல் எம்.பி-யான சின்ராஜ் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), திருச்செங்கோடு நகராட்சியில் கொரோனா ஆய்வுப் பணியை மேற்கொண்டார். அப்போது அ.தி.மு.க மகளிர் அணியினரும் பொதுமக்களும், ‘தொகுதிப் பக்கமே வராமல் எங்கே போனீர்கள்?’ என்று அவரை முற்றுகை யிட்டனர். அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய சின்ராஜ், ‘நடந்திருக்கும் ஊழலை மறைக்க திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதிதான் உங்களைத் தூண்டிவிட்டிருக்கிறார்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இந்த விவகாரம்தான் திருச்செங்கோடு அ.தி.மு.க-வில் இப்போது பற்றியெரிகிறது.

பொன்.சரஸ்வதி
பொன்.சரஸ்வதி

நாமக்கல் எம்.பி-யான சின்ராஜை முற்றுகையிட்டவர்களில் ஒருவரான சூரியகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த கல்பனாவிடம் பேசினோம். ‘‘குடிதண்ணிப் பிரச்னை தொடர்பா எம்.எல்.ஏ-வைப் பார்த்து முறையிடலாம்னு நகராட்சி ஆபீஸுக்குப் போனோம். அங்கே எம்.எல்.ஏ இல்லை. எம்.பி சின்ராஜ் இருந்தார். அவரை 55 நாளா தொகுதிப் பக்கமே பார்க்க முடியலை. அதனால நான், என்னோட வந்த நாலு பேர், பொதுமக்கள்னு இருபதுக்கும் மேற்பட்டோர் எம்.பி-யை முற்றுகையிட்டு, ‘அமைச்சரும் எம்.எல்.ஏ-வும் நிவாரணம் தர்றாங்க. 55 நாள்களா நீங்க எங்கே போனீங்க?’னு கேட்டோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதுக்கு எம்.பி-யோ, ‘எங்களை வீட்டைவிட்டு எங்கேயும் போகக் கூடாதுனு சொல்லிட்டாங்க’னு மழுப்பலாகச் சொல்லிட்டுக் கிளம்பிப் போயிட்டார். நான் அ.தி.மு.க-வுல இருக்கேன் என்பதற்காக, தொகுதிப் பக்கமே வராத எம்.பி-யைக் கேள்வி கேட்கக் கூடாதா? இந்தச் சம்பவத்துக்கும் எம்.எல்.ஏ-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’’ என்றார்.

இது குறித்து நாமக்கல் எம்.பி சின்ராஜிடம் பேசினோம். ‘‘ஆய்வுப் பணிக்காகச் சென்றிருந்த என்னை அ.தி.மு.க மகளிரணியினர் முற்றுகையிட்டனர். இதற்கு திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதியின் தூண்டுதல்தான் காரணம். திருச்செங்கோடு நகராட்சியில் கொரோனா பணியிலும், கான்ட்ராக்ட் பணியிலும் ஊழல் நடந்திருக்கிறது. அதற்கு எம்.எல்.ஏ-வான பொன்.சரஸ்வதி உடந்தை. அதைக் கண்டுபிடித்து வெளியிட்டுவிடுவேன் என்பதாலேயே என்னை முற்றுகையிட்டனர். கூடிய விரைவில் ஆதாரத்துடன் அதை வெளியிடுவேன்’’ என்று எச்சரித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன். சரஸ்வதியிடம் (அ.தி.மு.க) பேசினோம். ‘‘அவருக்கு வேறு வேலையே இல்லை. என்னைக் குறை சொல்வதையே பிழைப்பாக வைத்திருக்கிறார். கொரோனா நிவாரணப் பணிகளால் ஒரு நாளைக்கு நான் மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன். ஒரு எம்.பி 55 நாள்களாக வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்தால் பொதுமக்கள் கேள்வி கேட்காமல் என்ன செய்வார்கள்? நான் ஊழல் செய்ததாக இஷ்டத்துக்கும் பேசக் கூடாது. ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும். என் பெயருக்கு தொடர்ந்து களங்கம் விளைவிக்கும் அவருக்குத் தகுந்த பாடம் புகட்டுவேன்’’ என்றார் கோபமாக.

திருச்செங்கோட்டை அதிரவைக்கும் அரசியல் குஸ்தி!

திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளரான சையது முஸ்தபா கபாலிடம் பேசியபோது, ‘‘நகராட்சிப் பணிகளில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை’’ என்று திட்டவட்டமாக மறுத்தார்.

பேரிடர் காலத்தில் மக்க ளுக்காக இணைந்து பணியாற்ற வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் இப்படியா அடித்துக்கொள்வது?!