Published:Updated:

ரஜினியின் `புது புரட்சி'... தலைவர்கள் எழுச்சியூட்டுபவர்களா... காத்திருப்பவர்களா?

நடிகர் ரஜினி

ரஜினி கையில் எடுத்திருக்கும், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது நாட்டில் பல மாநிலங்களில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அந்த கொள்கையைத்தான் பின்பற்றுகிறது.

ரஜினியின் `புது புரட்சி'... தலைவர்கள் எழுச்சியூட்டுபவர்களா... காத்திருப்பவர்களா?

ரஜினி கையில் எடுத்திருக்கும், கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது நாட்டில் பல மாநிலங்களில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அந்த கொள்கையைத்தான் பின்பற்றுகிறது.

Published:Updated:
நடிகர் ரஜினி

மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி புரட்சியை விதைக்கும் தலைவர்களை இந்த உலகம் இதுவரை பார்த்துள்ளது. மக்கள் புரட்சியைப் பயன்படுத்தி, அக்கிரமக்காரர்களின் ஆட்சியை அகற்றும் தலைவர்களையும் இந்த மண் கண்டிருக்கிறது. இந்த வேர்ல்டுலேயே, 'மக்கள் மத்தியில் புரட்சி ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன்' என்று சொன்ன முதல் தலைவர் ரஜினிதான். வழக்கமாக பிரஸ்மீட் கொடுத்தால், முதலில் பிரஸ்மீட் கொடுப்பவர்கள் தங்கள் கருத்தைச் சொல்வார்கள். பிறகு, செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிப்பார்கள். ஆனால் இங்கே, தான் பேச வந்த கருத்தை மட்டும் சொல்லிவிட்டு, 'இப்போது நீங்கள் கேள்வி கேட்டால், நான் சொன்ன கருத்துகள் மக்களைச் சென்று சேராது ' என்று சொல்லி கிளம்பிப் போய்விட்டார் ரஜினி. கேள்விகளை எதிர்கொள்வதில் அவருக்குள்ள தயக்கத்தையே இது காட்டுகிறது.

புரட்சியளர் லெனின்
புரட்சியளர் லெனின்

நடிகர்கள் கட்சி தொடங்குவதும், தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்ததும் பிடிக்க நினைப்பதும், காலம் காலமாக நடந்து கொண்டிருப்பதுதான். ஆனால், ஒரே நாளில் வெற்றி கிடைத்து விட வேண்டும்; எந்தக் கஷ்டமும் படாமல் நேரடியாக ஆட்சிக்கு வந்துவிட வேண்டுமென்று யாரும் நினைத்ததில்லை. நடிகர் ரஜினி, மக்களுக்காக எந்தப் போராட்டமும் நடத்தியது கிடையாது. போராட்டம் நடத்தும் மக்களைச் சென்று சந்தித்ததோ அல்லது ஆறுதலோ சொன்னது கிடையாது.

எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.க போலவே நாம் தொடங்கும் கட்சியும் உடனே ஆட்சிக்கு வந்துவிடுமென்று ரஜினி கருதிக்கொண்டிருப்பது நிச்சயம் தவறானது. எம்.ஜி.ஆர் கதை வேறு. அந்த காலகட்டமும் வேறு. பல ஆண்டுளாக தி-மு.க-வில் அண்ணா, கருணாநிதி, ஈ.வி.கே. சம்பத் போன்ற பெருந்தலைவர்களுடன் பழகி அரசியல் கற்று, பிறகு தனியே கட்சியும் தொடங்கி, மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல கோடி மக்களைப் பார்த்து, தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றினார் எம்.ஜி.ஆர். ஆனால், ரஜினி இன்னும் களத்தில் இறங்கவேயில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போது, ரஜினி கையில் எடுத்திருக்கும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது நாட்டில் பல மாநிலங்களில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அந்தக் கொள்கையைத்தான் பின்பற்றுகிறது. மகாராஷ்டிரத்தில்கூட சிவசேனா இதே கொள்கையைத்தான் பால்தாக்கரே காலத்தில் பின்பற்றியது. 'பால்தாக்கரே என் கடவுள்' என்று சொன்னவர் ரஜினி. அதே, பால்தாக்கரே உயிரோடு இருந்த வரை, முதல்வர் பதவியில் அமர்ந்ததில்லை. கட்சித்தலைமை பால்தாக்கரேவிடம் இருக்கும். முதலமைச்சராக வேறு ஒருவர் இருப்பார். ஆனால், பால் தாக்கரேவை மீறி எந்த சிவசேனா முதல்வரும் செயல்பட்டுவிட முடியாது. பால்தாக்கரே சொல்வதையும் கை காட்டுவதையுமே அவரால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் செய்து கொண்டிருப்பார். கட்சித்தலைமை வேறு , ஆட்சிப் பதவி வேறு என்பதெல்லாம் சும்மா என்பதை நிரூபித்தது மகாராஷ்டிரா.

இதுவொன்றும் புதிய கண்டுபிடிப்போ அல்லது நாட்டில் நடைபெறாத விஷயத்தையோ ரஜினி சொல்லிவிடவில்லை. உண்மையில், 'தான் பதவி ஆசை இல்லாதவன்' என்கிற மாயையை ஏற்படுத்துகிறார் என்றே தோன்றுகிறது. பா.ம.க தலைவர் ராமதாஸ் கூட , 'நானோ என் குடும்பமோ பதவியில் அமராது ' என்று சொன்னவர்தான். 'என் மகன் அரசியலுக்கு வரமாட்டார் என்று ஸ்டாலின் சொல்லவில்லையா?'. கனி கனிந்து கைக்கு வந்துவிட்டால், காட்சிகள் மாறியதை தமிழகம் ஏற்கெனவே கண்டுவிட்டது.

தீபாவின் ஆதரவாளர்கள்
தீபாவின் ஆதரவாளர்கள்

இன்னோரு விஷயம் இங்கே கவனிக்கத்தக்கது. 'என்னை வருங்கால முதல்வர் என்று அழைக்காதீர்கள்! 'என்று ரஜினி இந்த பிரஸ்மீட் வழியாக வேண்டுகோள் வைத்துள்ளார். இவரைச் சுற்றியிருப்பவர்கள், ரஜினி மன்றத்தைச் சேர்ந்தவர்கள்தானே. அவர்கள்தானே இவரைப் பார்த்து 'வருங்கால முதல்வர் ' என்று சொல்கிறார்கள். தினமும் அன்றாடம் உழைத்துச் சம்பாதிக்கும் மக்கள் யாரும் இவரை, ‘வருங்கால முதல்வர்’ என்று வரவேற்பதில்லை. அவர்களுக்கு ஆயிரம் பிரச்னைகள். இவரைப் பற்றி யோசிப்பதற்குக்கூட அவர்களுக்கு நேரமில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்பு, 'வருங்கால முதல்வர் தீபாம்மா' என்ற சத்தமும் இதே மண்ணிலிருந்து எழுந்தது என்பதை ரஜினி மறந்துவிடக்கூடாது. இப்போதும் , தீபா மீண்டும் அரசியலுக்குள் நுழைந்தால், அதே கோஷம் எழத்தான் செய்யும்.

ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்துக்காக அல்லது ஆட்சி அதிகாரத்துக்காக ஆசைப்பட்டே அரசியலுக்கு வருகிறார்கள். சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள், சினிமாவில் தங்களுக்குக் கிடைத்த புகழை அரசியலில் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். அதற்காக கட்சியைத் தொடங்குகிறார்களே தவிர, மக்கள் நன்மைக்காக என்று சொல்வதை நம்புவதற்கு தமிழக மக்கள் யாரும் இப்போது தயாராக இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஜினியின் பேச்சுகுறித்து ஃப்ரன்ட்லைன் அசோஸியட் எடிட்டர் ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, ''ரஜினி, தனக்கு சரி என்று தோன்றியதைப் பேசியிருக்கிறார். இதுவெல்லாம் அரசியலுக்கு சப்போர்ட்டாக இருக்காது. ஒரு கட்சியின் அமைப்பை, தேர்தலுக்குப் பிறகு கலைத்துவிடுவேன். இல்லையென்றால் நீங்கள் ஊழல்வாதிகள் ஆகிவிடுவீர்கள் என்றெல்லாம் பேசுவது சரியில்லை. தன்னுடைய ஆட்கள்மீதுகூட நம்பிக்கை இல்லாதவர்கள்தான் இப்படிப் பேசுவார்கள். மாற்றத்தை நாம் முன்நின்று நடத்த வேண்டும். 'நீங்க ரெடியாகுங்கள், அப்புறம் நான் வந்து பார்க்கிறேன் ' என்பது ஏற்புடையது அல்ல. சமூகத்துக்கு, அரசியலுக்கு இது ஒத்து வராது. சினிமாவில் வேண்டுமானால் சரிப்பட்டு வரும். சினிமாவுக்கும் நிஜவாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசம் ரஜினிக்குத் தெரியுமா என்கிற கேள்விதான் எழுகிறது. ஒருவரை முதல்வராக்குவது மக்கள் கையில் உள்ள விஷயம். ரஜினி ரசிகர்களிடத்தில் இல்லை. அவரிடத்தில் தொடர்பில் இருப்பவர்கள், குருமூர்த்தி உள்ளிட்ட பல பா.ஜ.க -வினர்தான்.

ரஜினியை ஏதோ ஒரு சக்தி அரசியலுக்கு இழுத்து வர முயல்கிறது. அந்த சக்திக்கு அடிபணிந்து, அவர் செயல்படுவதைப் போலவே தோன்றுகிறது.
ராதாகிருஷ்ணன், ஃப்ரன்ட்லைன் அசோஸியட் எடிட்டர்

அவர்கள், நீங்கள் நின்றால் போதும் உங்களுக்கு எல்லாம் கிடைத்துவிடும் என்று அவருக்கு ஆசை காட்டியிருக்கலாம். அதனடிப்படையில், இவர் செயல்படுகிறார் என்றே தோன்றுகிறது. இன்னோரு விஷயமும் சொல்ல வேண்டும். ரஜினி மிகவும் குழப்பமான மனநிலையில்தான் இருக்கிறார். ரஜினிக்குப் பின்னால் ஒரு சக்தி இருந்து அவரை அரசியலுக்கு இழுத்துக்கொண்டு வர முயல்கிறது. அந்த சக்திதான் அவரை லீலா பேலஸ் வரை கொண்டுபோய் நிறுத்தியுள்ளது. ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால், ஏதோ ஒரு சக்தி அவரை ஆட்டுவிக்கிறது. அந்த சக்திக்கு அவர் அடிபணிகிறார் என்று நினைக்கிறேன்'' என்றார்.

எப்போதும் போல ரஜினி ரசிகர்களின் பார்வை வேறுவிதமாக இருக்கிறது. 'எந்தச் சூழலிலும் நாங்கள் எங்கள் தலைவரை விட்டுக்கொடுக்க மாட்டோம் ' என்று அவரின் ரசிகர்கள் இப்போதும் சொல்கின்றனர். ரஜினியின் பேச்சுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மன்றத்தில் துணைச்செயலாளர் ஆர். எஸ் . ராஜனிடம் பேசியபோது, ''ரஜினி என்ன சொன்னாலும் நாங்கள் அதற்கு ஆதரவு கொடுப்போம். ' பதவி வெறி பிடிச்சு அலையுற கூட்டங்களுக்கு மத்தியில், பதவியே வேண்டாம்' அப்படினு எங்கள் தலைவர் சொல்லியிருக்கிறார். மற்றவர்களுக்கு மத்தியில் அவர் வித்தியாசமானவராக இருக்கிறார். கிராமங்கள் தோறும் மக்கள் ரஜினி பற்றி இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். சரியான, தெளிவான முடிவு இது. கடந்த டிசம்பர் 31- ம் தேதி, ரஜினி எங்களை சந்திச்சார். அப்போது கூட 'முதல் - அமைச்சர் பதவியில் இருப்பேன்' என்று அவர் சொன்னதில்லை. 'முதல் காவலனாக இருப்பேன்' என்றுதான் சொன்னார். நாங்கள் மட்டுமல்ல, மக்களுமே அவரை முதலமைச்சராக்க விரும்புகிறார்கள். நானும் காங்கிரஸ் கட்சியில் மாநில விவசாயப் பிரிவு தலைவராக இருந்தவன்தான். எங்க தலைவர், 'எந்தக் கட்சில இருந்தாலும் நான் கூப்பிடும்போது வந்தா போதும்' என்றார். ஆனால் நானோ, எங்க தலைவருக்காக பதவியை தூக்கி எறிஞ்சுட்டு வந்தேன். என்னை மாதிரி லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு இருக்காங்க. தி.மு.க, அ.தி.மு.க , காங்கிரஸ் கட்சிகளில் முக்கியமானவர்களுக்கு அல்லது அவர்களின் வாரிசுகளுக்குத்தான் தொடர்ந்து எம்.எல்.ஏ ஆக வாய்ப்பு கொடுக்குறாங்க. எங்க தலைவர் இளைஞர்களைப் பற்றி சிந்திக்கிறார். 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார்.

மற்ற கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள், எங்க தலைவரிடத்தில் ஐக்கியமாகிவிடுவாங்க. எங்க தலைவர் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவோம். அவருக்கு, கடைசி வரை விசுவாசியாகத்தான் இருப்போம். ரஜினி முதல் அமைச்சர் பதவியை விரும்பவில்லையென்றாலும் அவர்தான் அந்தப் பதவியில் இருக்க வேண்டும் என்று மக்கள் புரட்சி வெடிக்கும்’’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ரஜினி ரசிகர் ஆர்.எஸ். ராஜன்
ரஜினி ரசிகர் ஆர்.எஸ். ராஜன்

ஆனால் பொதுவானவர்களிடத்தில் கருத்து கேட்டால், '' இந்தியாவிலேயே வளர்ந்துவிட்ட பொருளாதாரச் செழிப்பு மிகுந்த மாநிலத்தில் ரஜினிகாந்த் வசிக்கிறார். உழைப்பில் கல்வியில் திறமை செறிந்த மக்கள் மத்தியில் அவரும் உழைப்பால் உயர்ந்துள்ளார். இந்த மக்கள் அவருக்கு 'சூப்பர் ஸ்டார்' பட்டமும் கொடுத்து அழகுபார்க்கின்றனர். ஆனால், அந்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. புரட்சியை ஏற்படுத்துகிறவன்தான் தலைவன். நீங்கள் புரட்சி செய்யுங்கள் அதற்குப் பிறகு நான் வருகிறேன் என்பதெல்லாம் உலகத்திலேயே பார்க்காத புது விஷயம். மக்கள் ஒருபோதும் குழம்ப மாட்டார்கள். தேர்தலை நேரில் சந்திக்கும்போது ரஜினிக்கு அது தெரியவரும். இனிமேலாவது ரஜினி குழம்பிக்கொள்ளாமல், அவர் பணியை மட்டும் பார்ப்பது நல்லது'' என்கிறார்கள்.

ஒரு படத்தில் காமெடி நடிகர் செந்தில், 'நான் மலையைத் தூக்கப் போகிறேன்' என்று மக்களிடத்தில் சொல்வார். அதை நம்பி கூட்டம் கூடிவிடும். பின்னர், 'மலையைத் தூக்கி என் கையில் வையுங்கள்... அப்பத்தானே நான் தூக்க முடியும்’ என்று சொல்வார். ரஜினியின் கூற்று செந்தில் காமெடியை நினைவுபடுத்துகிறது.

ரஜினிக்காக மலையைத் தூக்குவார்களா தமிழக மக்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism