Published:Updated:

போட்டோ தாக்கு

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணாமலை

`எத்தனையோ போட்டோ ஷூட் நடத்துன மோடி ஜி சந்தோஷமா இருக்கார். ஒரே ஒரு படகு போட்டோ ஷூட் நடத்திட்டு நான் படுற அவஸ்தை இருக்கே...

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@balasubramni1

அண்ணே அடிச்சுக்கூட கேப்பாய்ங்க... சொல்லிடாதீங்க! - இப்படிக்கு ராஜேந்திர பாலாஜி

@Kirachand4

வாயால் வடை சுடுவதில் என்னை மிஞ்சும் எண்ணத்தைக் கைவிடவும்! - இப்படிக்கு ஜி

@manipmp

‘தமிழகத்தில் தாமரை மலரும்!’ - இந்தச் செய்தியைப் பத்தாயிரம் பேருக்கு ஃபார்வேடு செய்தால், நல்ல செய்தி வந்துசேரும். இல்லையென்றால், ரத்தம் கக்கிச் சாவாய்!

@IamUzhavan

‘அடி ஆத்தி... பஞ்சு விலை இவ்வளவு அதிகமா இருக்கு. அப்ப இந்த வாட்டி அரிசிப் பொங்கலே வெச்சுரவேண்டியதுதான்!’

@parveenyunus

`எத்தனையோ போட்டோ ஷூட் நடத்துன மோடி ஜி சந்தோஷமா இருக்கார். ஒரே ஒரு படகு போட்டோ ஷூட் நடத்திட்டு நான் படுற அவஸ்தை இருக்கே... ஐயய்யோ..!’

@urs_venbaa

கேரளாவில் நடக்கும் படகுப் போட்டிக்கு உங்கள் பெயரைக் கொடுக்கட்டுமா?

- இப்படிக்கு உயிர்த் தொண்டன்

@h_umarfarook

‘யார்ரா அது... என்னைய பப்ஜி விளையாடக் கூப்புடறது?’

@DevAnan82181837

`என்னாது... ஆன்ட்டி இண்டியனா..? யாருக்கோ அனுப்பவேண்டிய மெசேஜை ஹெச்.ராஜாண்ணன் எனக்கு அனுப்பிட்டார்போல!’

FACEBOOK

VKarthik

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படகுப் போட்டி நடைபெறவிருப்பதால், விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியைப் பதிவுசெய்து கலந்துகொள்ளலாம்!

Adhirai Yusuf

‘என்னது... தாமரை குறைந்த ஓட்டு வாங்கி எலிமினேட் ஆயிட்டாங்களா... சாரணர், நோட்டா வரிசையில இப்ப `பிக் பாஸி’லுமா?!’

Mannargudi Rajagopal

`தமிழ்நாட்டுல தாமரை எப்போ மலரும்னு பஞ்சாங்கத்துல, கம்ப்யூட்டர்ல, அவ்வளவு ஏன் வைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடியில கூடத் தேடிப் பார்த்தாச்சு. இனி பாக்கி இருக்குறது கூகுள்தான். அதுலயும் தேடிப் பார்த்துடுவோம்...’

Sanjeevi Bharathi

‘ `ஏதாவது கன்டென்ட் கொடுங்க’னு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் மெசேஜுக்கு மேல மெசேஜ் போட்டுக்கிட்டே இருக்காங்களே... என்னடா இது இந்த அண்ணாமலைக்கு வந்த சோதனை!’

Mani Pmp

உ.பி பக்கம் வரவும். பொங்கல் பரிசு காத்திருக்கிறது!

Uzhavan Navaneetha Krishnan

‘போட்டோ ஷாப்ல... இந்த போட்டோவை அந்த போட்டோவோட எப்படிச் சேர்க்குறதுன்னு தெரியலையே.... வானதி அக்காகிட்ட கேட்க வேண்டியதுதான்!’

Kavi Chennappan

`எவ்வளவு தேடியும் ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னு’ பாட்டு மட்டும் கிடைக்கவே மாட்டேங்குதே..!’

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan