Published:Updated:

"சாதியக் கொடுமைகளுக்குப் பின்னணியில் ஓட்டு அரசியல்!"- சாமுவேல்ராஜ் சவுக்கடி

சாதி தோன்றிய காலத்திலேயே சாதிக்கு எதிரான குரல் இங்கு எழுந்துவிட்டது. சித்தர்கள் தொடங்கி திருவள்ளுவர், வள்ளலார், வைகுண்ட சாமி என ஏராளமானோர் சாதிக்கு எதிராக குரல்கொடுத்தனர்.

சாமுவேல்ராஜ்
சாமுவேல்ராஜ்

சாதிய கொடுமைகள் வட மாநிலங்களில் அதிகம். சமீபகாலமாக தமிழ்நாட்டிலும் நிலைமை மோசமாகிவருகிறது. தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர களப்பணி ஆற்றிவருகிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. இந்த அமைப்பின் பொதுச்செயலாளரான சாமுவேல்ராஜ், சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல்கொடுப்பவர். 30 ஆண்டுகளுக்குமேல் களப்பணி ஆற்றிவரும் அவரிடம் பேசினோம்.

"சாதிய கொடுமைகளை எதிர்ப்பதற்கென்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தனி அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்தளவுக்கு தமிழகத்தில் தீண்டாமை உள்ளதா?"

சாதி ஒழிப்பை மிகப்பெரிய அளவுக்கு அரசியலாகவே செய்தவர் பெரியார். ஆகவேதான், சாதிச் சங்கங்களின் தலைவர்களால்கூட தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சாதியைப் போட்டுக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது.

"இதே கேள்வியை எங்களிடம் உயர் நீதிமன்றமே ஆச்சர்யத்துடன் கேட்டது. தனியாக ஓர் அமைப்பு செயல்பட வேண்டிய அளவுக்கு தமிழகத்தில் மோசமான ஒரு களச்சூழல் உள்ளது என்பதுதான் உண்மை. தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஓர் ஆய்வில், இங்கு 82 வடிவங்களில் தீண்டாமை இருப்பது தெரியவந்தது. எங்களால் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு இங்கு சாதிய வன்கொடுமைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன." விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2PJ9BMQ

"இங்கு பெரியார் உட்பட பலர் சமூகச் சீர்த்திருத்தப் பணிகளை மிகப்பெரிய அளவில் மேற்கொண்டும் ஏன் இந்த நிலைமை?"

"சாதி தோன்றிய காலத்திலேயே சாதிக்கு எதிரான குரல் இங்கு எழுந்துவிட்டது. சித்தர்கள் தொடங்கி திருவள்ளுவர், வள்ளலார், வைகுண்ட சாமி என ஏராளமானோர் சாதிக்கு எதிராக குரல்கொடுத்தனர்; இலக்கியங்கள் படைக்கப் பட்டுள்ளன. சாதி ஒழிப்பை மிகப்பெரிய அளவுக்கு அரசியலாகவே செய்தவர் பெரியார். ஆகவேதான், சாதிச் சங்கங்களின் தலைவர்களால்கூட தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சாதியைப் போட்டுக்கொள்ள முடியாத நிலை இருக்கிறது. இவ்வளவு சமூகச் சீர்திருத்தப் பணிகள் நடைபெற்றும், சில அரசியல் இயக்கங்களில் ஓட்டு அரசியலுக்காகவே சாதியம் வளர்த்தெடுக்கப்பட்டது. இதன் பின்னணியில்தான் சாதிய கொடுமைகளும் ஊக்கம் பெறுகின்றன."

"சாதியக் கொடுமைகளுக்குப் பின்னணியில் ஓட்டு அரசியல்!"- சாமுவேல்ராஜ் சவுக்கடி

"உழைக்கும் மக்கள், சாதியால் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களுக்குள் சாதிப் பிரச்னை வரும்போது, அதில் தலையிடுவதில் என்ன மாதிரியான பிரச்னையை நீங்கள் எதிர்கொள்கிறீர்கள்?"

"கம்யூனிஸ்ட் இயக்கம் என்பது நடுநிலை இயக்கமல்ல; யார் பாதிக்கப்படுகிறார்களோ, அவர்களுக்காகப் போராடும் இயக்கம். அதனால், நிறைய இழப்புகளை கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்துள்ளது. இழப்பதற்கு ஏதுமற்ற தொழிலாளிவர்க்கம், விவசாயக் கூலிகள்தான் என்றாலும், சாதி என்கிற பெருமிதமான ஓர் உணர்வு அந்த மக்களுக்கும் இருக்கிறது. அந்தச் சாதி உணர்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாம் இருவரும் தொழிலாளர்கள், விவசாயிகள் என்கிற உணர்வை மேம்படுத்துவதைத்தான் கம்யூனிஸ்ட் இயக்கம் செய்துவருகிறது. பாதிக்கப் பட்டவரின் பக்கம் நின்றுகொண்டு போராடுவதும், அதே நேரத்தில் அந்தப் பாதிப்புக்குக் காரணமானவர்களின் அடிப்படைப் பிரச்னைகளையும் சேர்த்துக் கொண்டு போராடுவதுதான் கம்யூனிஸ்ட் இயக்கம்."

- இந்த விரிவான நேர்காணலை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "சாதிக்கு எதிரான போராட்டத்தில் நடுநிலை வகிக்க முடியாது!" - சவுக்கடி கொடுக்கிறார் சாமுவேல்ராஜ் https://www.vikatan.com/government-and-politics/politics/samuel-raj-interview-about-communism-centenary

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |