Published:Updated:

''ஆமாம், நஷ்டத்துலதான் ஓடிக்கிட்டிருக்கு!'' - அதிர்ச்சி ரிப்போர்ட்டுக்கு அமைச்சர் பதில்

போக்குவரத்துக் கழகம்
போக்குவரத்துக் கழகம்

2017-18 நிதியாண்டில் மட்டும் 5,252.60 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதில், கோயம்புத்தூர், விழுப்புரம், திருநெல்வேலி, சேலம் ஆகிய நான்கு போக்குவரத்துக் கழகங்களில் மட்டும் அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

'தமிழக போக்குவரத்துத் துறை கடும் நஷ்டத்தில் இயங்கிவருகிறது. வருமானத்தை விஞ்சிய செலவுகளும் தனியார் வளர்ச்சிக்குத் துணைபோவதும்தான் நஷ்டத்துக்குக்கான காரணம்' என்று தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அதுதொடர்பான தகவல்களைத் திரட்ட களமிறங்கியது விகடன் ஆர்.டி.ஐ குழு. தமிழகத்தின் சென்னை, மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் ஆகிய ஏழு கோட்டங்களில் 2014-15 முதல் 2017-18 வரையிலான நான்கு ஆண்டுகளின் வரவு-செலவு புள்ளிவிவரங்களை, தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தோம். கிடைத்த பதில்கள் அதிர்ச்சி ரகம்!

தமிழக போக்குவரத்துத் துறையின் ஏழு கழகங்களில் 2014-2015 நிதியாண்டு முதல் 2017-18 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் 12,963.54 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

''ஆமாம், நஷ்டத்துலதான் ஓடிக்கிட்டிருக்கு!'' - அதிர்ச்சி ரிப்போர்ட்டுக்கு அமைச்சர் பதில்

குறிப்பாக, 2017-18 நிதியாண்டில் மட்டும் 5,252.60 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதில், கோயம்புத்தூர், விழுப்புரம், திருநெல்வேலி, சேலம் ஆகிய நான்கு போக்குவரத்துக் கழகங்களில் மட்டும் அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைச் சந்தித்துப் பேசினோம்.

"ஆமாம், நஷ்டத்துலதான் ஓடிக்கிட்டிருக்கு. இது மக்களுக்கான சேவை. இதில் லாபத்தை எதிர்ப்பார்க்க முடியாது" என்றவரிடம், சில கேள்விகளை முன்வைத்தோம்.

"கடந்த ஆண்டில் மட்டும் 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்துக்கு என்ன காரணம்?''

"டீசல் விலை, ஊதியம் என நிறைய காரணங்கள் இருக்கின்றன."

"ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியே செய்யாமல் ஊதியம் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?"

"அது பொய்யான குற்றச்சாட்டு."

"புதிதாக வாங்கும் பேருந்துகள் அனைத்தும் குறிப்பிட்ட நிறுவனங்களிடம் மட்டுமே பாடி கட்டக் கொடுக்கப்படுகின்றன. உதிரிபாகங்கள் வாங்குவதிலும் முறைகேடு நடக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளதே?"

''ஆமாம், நஷ்டத்துலதான் ஓடிக்கிட்டிருக்கு!'' - அதிர்ச்சி ரிப்போர்ட்டுக்கு அமைச்சர் பதில்

"அப்படியெல்லாம் கிடையாது. டெண்டர் விடப்பட்டு எல்லாமே முறைப்படிதான் நடக்கின்றன."

"கர்நாடகாவில் போக்குவரத்துத் துறை லாபத்தில் இயங்குகிறதே?"

"அங்குள்ள பேருந்துக் கட்டணத்துக்கும் இங்குள்ள கட்டணத்துக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. நம் மக்கள் குறைந்த கட்டணத்தில் போக்குவரத்துச் சேவையைப் பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு!"

நான்கு போக்குவரத்துக் கழகங்களின் வரவு செலவுகளை தனித்தனியாக எவ்வளவு? இந்த நஷ்டத்துக்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்னென்ன? கர்நாடக போக்குவரத்துக் கழகம் கலக்குவது எப்படி?

- இவற்றுக்கான பதில்களைத் தரும் ஜூனியர் விகடன் இதழின் முழுமையான செய்திக் கட்டுரையை வாசிக்க > அதலபாதாளத்துக்குச் செல்கிறதா தமிழக போக்குவரத்துத் துறை? - அதிரவைக்கும் விகடன் ஆர்.டி.ஐ ரிப்போர்ட் https://www.vikatan.com/government-and-politics/news/vikatan-rti-report-about-tnstc

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு