Published:Updated:

இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் தமிழகத்தின் பங்கு அதிகம்... எப்படி?

5 டிரில்லியன் பொருளாதாரம் சாத்தியமானால், அதில் தமிழகத்தின் பங்கு பெருமளவு இருக்கும் என்பதே பல பொருளாதார நிபுணர்களின் கருத்து.

பொருளாதாரம்
பொருளாதாரம்

'2024-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே இந்தியாவின் முதன்மை இலக்கு' - பிரதமர் மோடியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மீண்டும் மீண்டும் சொல்லும் வார்த்தைகள் இவை. விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2rJM70x

ஒரு டிரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி. அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு என்ன என்பதையும் 5 டிரில்லியன் டாலருக்கு எத்தனை பூஜ்யம் என்பதையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

"நடப்பு 2019-20-ம் நிதி ஆண்டில் 7 சதவிகித அளவுக்கு மட்டுமே ஜி.டி.பி வளர்ச்சி உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். என்றாலும், இந்த ஆண்டில் நமது பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக உயரும் என்று சொல்லியிருக்கிறார் நிர்மலா சீதாராமன். ஆனால், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற நிலையினை அடைய இந்த வளர்ச்சி வேகம் நிச்சயம் போதாது. அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் சராசரியாக 12 சதவிகிதம் ஜி.டி.பி வளர்ச்சி இருந்தால் மட்டுமே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற கனவு நனவாகும்" என்கிறார் ஆடிட்டர் கோபால கிருஷ்ண ராஜூ.

ஆனால், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்தியாவின் ஜி.டி.பி-யானது கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே இரட்டை இலக்கத்தில் வளர்ந்திருக்கிறது. அதாவது, கடந்த 2010-ல் 11 சதவிகிதத்துக்குச் சற்று அதிகமாக வளர்ச்சி கண்டிருக்கிறது. அதன்பிறகு 2011-ல் 10 சதவிகிதம் என்கிற இலக்கினைத் தொட்டது. அதன்பிறகு இரட்டை இலக்கத்தைத் தொடவே இல்லை. இப்படியிருக்கும் போது அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 12 சதவிகித வளர்ச்சியை நமது பொருளாதாரம் காணுமா என்கிற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.

மோடி
மோடி

இந்தியப் பொருளாதாரத்தை வலுப்பெறச் செய்வதில் தமிழகத்தின் பங்கு மிக அதிகம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு பெருமளவு. மராட்டிய மாநிலத்தை அடுத்து அந்நிய முதலீட்டை அதிகம் பெறும் மாநிலம் தமிழகம்தான். மேலும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், மென்பொருள் உற்பத்தி, பி.பி.ஓ போன்ற துறைகளில் மிளிர்கிறது தமிழகம். இந்த வளர்ச்சியினால் தமிழகத்தின் வேலைவாய்ப்பு நிலவரம் முன்னேறி, படித்த இளைஞர்களிடம் வேலையில்லாத் தட்டுப்பாடு குறைக்கப்பட்டுவிட்டது. 5 டிரில்லியன் பொருளாதாரம் சாத்தியமானால், அதில் தமிழகத்தின் பங்கு பெருமளவு இருக்கும் என்பதே பல பொருளாதார நிபுணர்களின் கருத்து.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறைத் தலைவர் க.ஜோதி சிவஞானம், "பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அறிமுகம் போன்றவற்றால் பொருளாதார வளர்ச்சி சரிந்திருக்கிறது. உலகளவில் பொருளாதாரத்தை அளவிட இரு மதிப்பீடுகள் முக்கியம். ஒன்று ஜி.டி.பி வளர்ச்சி விகிதம். மற்றொன்று நிதிப்பற்றாக்குறை. இந்தியாவில் இந்த இரண்டுமே இன்று கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த நிலையில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக 2024-ல் இந்தியாவை வளர்த்தெடுப்போம் என்கிறார்கள். முன்பு 'அச்சே தின்' வரும் (நல்ல காலம் பிறக்கப்போகிறது) என்று சொன்னதைப் போலத்தான் இது" என்கிறார்.

"கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதம். கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டின் வளர்ச்சி விகிதம் 5.8 சதவிகிதம். ஆனால், இந்த வளர்ச்சி விகிதம் எல்லாமே, திருத்தப்பட்ட முறையின் கீழ் காட்டப்பட்ட வளர்ச்சி விகிதம்" என்கிறார் மூத்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான அரவிந்த் சுப்பிரமணியம். இவரது கேள்வியில் உள்ள யதார்த்தம் கசக்கும் என்றாலும் உண்மையான யதார்த்தம். 'கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் காட்டப்போகிறார்களாம்' என்கிற பழமொழிதான், மத்திய அரசின் '5 டிரில்லியன் டாலர்' பேச்சுகளைப் பார்க்கும்போது நினைவுக்குவருகிறது.

இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் தமிழகத்தின் பங்கு அதிகம்... எப்படி?

இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது. பல நிறுவனங்கள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேலையிழப்பு அதிகரித்திருக்கிறது. ஆட்டோமொபைல் துறை அடிவாங்கியிருக்கிறது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கு சம்பளம் போட வழியில்லை. விருப்ப ஓய்வுத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியப்பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்டும் என்பது நனவாகும் கனவா, வெறும் பகல்கனவுதானா?

- இந்தக் கேள்விக்கு விடைதேடும் முழுமையான அலசல் கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > 5 டிரில்லியன் டாலர்... நிறைவேறும் கனவா, நிராசையா? https://www.vikatan.com/news/politics/discuss-about-indian-economy-growth-to-5-trillion-dollar

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo