Published:Updated:

டோல்கேட்களில் நடக்கும் முறைகேடுகளும் `ஃபாஸ்ட் டேக்' குளறுபடிகளும்! - ஒரு பார்வை

ஃபாஸ்ட் டேக்

தொப்பூர் டோல்கேட் மட்டுமன்றி, தேவையில்லாத செலவாக கருப்பூர் டோல்கேட்டிலும் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

டோல்கேட்களில் நடக்கும் முறைகேடுகளும் `ஃபாஸ்ட் டேக்' குளறுபடிகளும்! - ஒரு பார்வை

தொப்பூர் டோல்கேட் மட்டுமன்றி, தேவையில்லாத செலவாக கருப்பூர் டோல்கேட்டிலும் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Published:Updated:
ஃபாஸ்ட் டேக்

நெடுஞ்சாலைகளில் செல்வதற்கு வரி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்ட டோல்கேட் திட்டம், காலப்போக்கில் மக்களிடம் அடாவடி வசூல் செய்வதாக நாடு முழுவதுமே குற்றச்சாட்டு உண்டு.

உண்மையில், புதிதாக ஒரு வாகனத்தை வாங்கி அதை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்யும்போதே, குறிப்பிட்ட ஒரு தொகையை 'சாலை வரி' என வசூலித்து விடுகிறார்கள். அரசு அமைத்திருக்கும் சாலைகளைப் பயன்படுத்துவதற்காகத்தான் அந்தச் சாலை வரி. அதன் அடிப்படையில், மக்களுக்கு சாலை அமைத்துத் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால், சாலை அமைக்கும் பணியை தனியாருக்கு அளித்து, அவர்கள் சாலையைப் பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலிக்க அரசே வழிவகை செய்து கொடுத்திருக்கிறது. இதுகுறித்து கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள், ''இந்தத் திட்டத்தில் அமைச்சர் களுக்கும் அதிகாரிகளுக்கும் சாலை அமைக்கும் தனியார் நிறுவனங்கள் பல கோடி ரூபாயை கமிஷனாக அளித்துவருகின்றன. இதனால், பல டோல்கேட்களில் அனுமதிக்காலம் முடிந்த பிறகும், கட்டணம் வசூலிக்கப்படுகிறது'' என்றனர். இந்த நிலையில்தான் டோல்கேட்களில் நடக்கும் முறைகேடுகள்குறித்து விசாரிக்க, களம் இறங்கியது ஜூ.வி டீம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/38W5zZ6

சேலம்: மாநகராட்சி எல்லையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் தள்ளித்தான் டோல்கேட் அமைக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. அதன்படி, சேலம் மாவட்டத்தில் முன்பு தர்மபுரி செல்லும் வழியில் தொப்பூர் கணவாய் அருகே டோல்கேட் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே விதிமுறைகளை மீறி சேலம் மாநகர எல்லையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகம் அருகே டோல்கேட் அமைத்துவிட்டார்கள். இந்தச் சாலை, அரசு பராமரிப்பில் இருக்கும் தங்க நாற்கரச் சாலையாகும். இதில் பயணிக்க, மக்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தனியார் பராமரிக்கும் நான்குவழிச் சாலைக்குத்தான் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், தொப்பூர் கணவாய்க்கு சுமார் 50 கிலோமீட்டர் முன்னதாகவே அரசு பராமரிக்கும் சாலையில் டோல்கேட் அமைத்ததால், பெங்களூர் மார்க்கமாக சென்னை செல்பவர்கள், பெங்களூர் மார்க்கத்திலிருந்து கோவை, திருப்பூர், கேரளத்துக்குச் செல்பவர்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரியிலிருந்து சேலம் வருபவர்கள் அனைவரும் தொப்பூர் டோல்கேட் மட்டுமன்றி, தேவையில்லாத செலவாக கருப்பூர் டோல்கேட்டிலும் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

டோல்கேட்களில் நடக்கும் முறைகேடுகளும் `ஃபாஸ்ட் டேக்' குளறுபடிகளும்! - ஒரு பார்வை

கோவை: கொச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோவை - நீலாம்பூரிலிருந்து வாளையாறு வரை உள்ள 40 கிலோமீட்டர் தூரத்தில் நான்கு டோல்கேட்கள் இருக்கின்றன. இந்த டோல்கேட்கள் பல ஊர்களுக்குச் செல்லும் குறுக்குச்சாலைகளைக் குறிவைத்து அமைக்கப்பட்டுள்ளன. ‘`இந்த டோல்கேட்களில் வாங்கும் கட்டணத்துக்கு ஏற்ப சாலையைப் பராமரிப்பதில்லை’’ என்கிறார்கள் வாகன ஓட்டிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

- இவை சாம்பிள்தான். மதுரை, திருச்சி, கரூர், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலுள்ள டோல்கேட்களில் நடக்கும் முறைகேடுகள்குறித்து விசாரிக்க, களம் இறங்கியது ஜூ.வி டீமுக்கு கிடைத்த ரிப்போர்ட்டை முழுமையாக வாசிக்க > விதிகளை மீறும் டோல்கேட்கள்... கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்! - ஓர் அலசல் ரிப்போர்ட் https://www.vikatan.com/government-and-politics/policies/atrocities-of-tollgates

ஃபாஸ்ட் டேக் குளறுபடிகள்!

நெடுஞ்சாலை டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, ஃபாஸ்ட் டேக் என்னும் முறை ஏற்கெனவே அமலில் இருக்கிறது. ஃபாஸ்ட் டேக் என்பது, ஒரு சின்ன கோடிங் கொண்ட ஸ்டிக்கர்தான். மொபைல் ரீசார்ஜ் செய்வதுபோல் ஃபாஸ்ட் டேக் கணக்கையும் ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடியைக் கடக்கும்போது ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்டு, கணக்கில் உள்ள பணம் தானாகக் கழித்துக்கொள்ளப்படும். இதனால் சுங்கச்சாவடியில் காத்திருக்கும் நேரம் குறைவதோடு, கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும். 2019, டிசம்பர் 1-ம் தேதி முதல் இது கட்டாயம் என்றது மத்திய அரசு. இந்தத் தேதி, பிறகு டிசம்பர் 15 என மாற்றி அமைக்கப்பட்டது. எனவே, விரைவில் ஃபாஸ்ட் டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.

டோல்கேட்களில் நடக்கும் முறைகேடுகளும் `ஃபாஸ்ட் டேக்' குளறுபடிகளும்! - ஒரு பார்வை

ஆனால், ஃபாஸ்ட் டேக் எங்கு வாங்குவது என்பதிலேயே குழப்பம் நிலவுகிறது. அனைத்து வங்கிகளின் இணையதளங்களிலும் மொபைல் செயலிகளிலும் இதற்கான விளம்பரங்கள் வருகின்றன. 'பேடிஎம்' உள்ளிட்ட வாலெட்களிலும் ஃபாஸ்ட் டேக் கிடைக்கிறது. சில இடங்களில் இலவசம் என விளம்பரப்படுத்தப்பட்டாலும் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே, மத்திய அரசு ஃபாஸ்ட் டேகை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனால் முன்பே பணம் செலவழித்து இதை வாங்கியவர்கள் அதிருப்தியடைந்தார்கள்.

ஃபாஸ்ட் டேகைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்பு உணர்வும் அவ்வளவாக இல்லை. ஆன்லைனில் ஃபாஸ்ட் டேகைப் பதிவுசெய்த ஒருவருக்கு தபாலில் டேக் வந்திருக்கிறது. ஆன்லைனிலேயே ரீசார்ஜும் செய்துவிட்டார். அவர் ஊரிலிருந்து காரில் சென்னைக்கு வந்தபோது தபால் மூலம் வந்திருந்த ஃபாஸ்ட் டேக் கவரை காரின் டேஷ்போர்டில் வைத்திருக்கிறார். வரும் வழியிலெல்லாம் அவர் டோல்கேட் கட்டணமும் கட்டியிருக்கிறார். ஃபாஸ்ட் டேகிலிருந்தும் கட்டணம் எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் சென்னைக்கு வந்து மொபைலைப் பார்த்தபோதுதான் குறுஞ்செய்தி மூலம் பணம் எடுக்கப்பட்டது தெரிந்திருக்கிறது. காரில் எங்கு வைத்தாலும் அதை ஸ்கேன் செய்யக்கூடிய அளவுக்கு ஃபாஸ்ட் டேக் இருப்பது நல்ல விஷயம்தான். ஆனாலும், அதிலும் இப்படி ஒரு சிக்கல்!

> ஜூனியர் விகடனில் முழுமையான அலசல் கட்டுரையை வாசிக்க > விதிகளை மீறும் டோல்கேட்கள்... கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்! - ஓர் அலசல் ரிப்போர்ட் https://www.vikatan.com/government-and-politics/policies/atrocities-of-tollgateshttps://www.vikatan.com/government-and-politics/policies/atrocities-of-tollgates

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism