Published:Updated:

“கட்சியினர் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள்!”

கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி

கோஷ்டி மோதலுக்கு விளக்கமளிக்கும் கே.எஸ்.அழகிரி...

“கட்சியினர் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள்!”

கோஷ்டி மோதலுக்கு விளக்கமளிக்கும் கே.எஸ்.அழகிரி...

Published:Updated:
கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி யின் கண்களில் கண்ணீரை வரவைத்தது என்றால், கட்சிக்குள் கதர்ச்சட்டைகள் நடத்திவரும் கலாட்டாக்கள் ஒட்டுமொத்தக் கட்சியையே கதறவைத்திருக்கின்றன. இந்தச் சூழலில்தான் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் பேசினோம்...

“எந்தக் கட்சியிலும் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சியினர் பகிரங்கமாகவே அடித்துக்கொள்கிறார்கள்... இந்த உட்கட்சிப் பூசல்கள் மக்கள் மத்தியில் கட்சியைப் பலவீனப்படுத்திவிடாதா?’’

“காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி. தோழர்கள் தங்களது கருத்துகளை, மன வருத்தங்களைச் சொல்லும்போது சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு 2,500-க்கும் மேற்பட்ட விண்ணப் பங்கள் வந்துள்ள நிலையில், 25 தொகுதிகளில் மட்டுமே நாங்கள் போட்டியிடும்போது இது போன்ற நெருக்கடிகள் வரத்தான் செய்யும். ஓரிரு நாள்களில் இது சரியாகிவிடும்.’’

“உங்களைச் சந்தித்து ஆதரவு பெறவந்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், இந்த கலாட்டாக்களைக் கண்டு பதறிப்போய் திரும்பிவிட்டார்களாமே?’’

“அப்படியல்ல... அதன் பிறகு தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் என்னை வந்து பார்த்து, வாழ்த்து பெற்றுச் சென்றார்கள். திரும்பவும் சொல்கிறேன். எங்கள் கட்சிக்குள் நடைபெறுவது கோஷ்டி சண்டையில்லை. பொறுப்பு கிடைக்கப் பெறாத வர்கள் கொஞ்சம் சங்கடப்படுகிறார்கள். அவ்வளவுதான். கடந்த காலங்களில் இருமுறை, அதிகாரபூர்வமாக எனக்குத் தொகுதி அறிவிக்கப்பட்டு, நானும் வாக்கு கேட்டுப் பிரசாரமும் சென்ற பிறகு எனக்கு வாய்ப்பு பறிபோயிருக்கிறது. அது போன்ற நேரங்களில் விரக்தி ஏற்படும்தான். இதையெல்லாம் தாண்டிச் செல்வதுதான் அரசியல்.’’

“கட்சியினர் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறார்கள்!”

“உண்ணாவிரதப் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக உங்கள் ஆதரவாளர்களே உண்ணும் விரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களே?’’

“இல்லையில்லை... அப்படியான கோஷ்டிகள் எதையும் நான் வைத்துக்கொள்வதே கிடையாது. அப்படி யாரேனும் செய்திருந்தால் அது மிக மிகத் தவறு. ஒருவர் தன் குறையைச் சொல்லவரும்போது, இன்னொருவர் அதற்கு எதிராகச் செய்வதென்பது அநாகரிகமானது; அதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.”

“காங்கிரஸில் பணக்காரர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படுவதாகக் கட்சியின் முக்கியத் தலைவர்களே குமுறுகின்றனரே?’’

“இதெல்லாம் தவறு. நான் அறிந்தவரையில் காங்கிரஸ் கட்சியில்தான் ஏழைகளுக்கும் தொகுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஒன்பது வேட்பாளர்களின் பொருளாதார நிலையை நீங்களே செக் செய்து பாருங்கள்.’’

“அந்த ஒன்பது பேரில் ஒருவரான ஜோதிமணி எம்.பி-யே ‘பணம் இருப்பவர்களுக்குத்தான் காங்கிரஸில் சீட் என்பது ரத்தத்தைக் கொதிக்கவைக்கிறது’ என்று கொந்தளித்திருக்கிறாரே?’’

“கட்சி இப்போது அறிவித்திருக்கும் வேட்பாளர் பட்டியலைப் பாருங்கள்... நடுத்தர பொருளாதாரச் சூழலில் இருப்பவர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பணத்தை எடுத்துக்கொண்டு வந்து கட்சியில் சீட் வாங்கியிருக்கிறார் என்று ஒருவரைக்கூட நீங்கள் காட்ட முடியாது. பேட்டியை முடித்துக்கொள்ளலாம்... போதும்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism