Published:Updated:

ஸ்டாலினிடம் கொந்தளித்த உதயநிதி... ரியாக்‌ஷனோ அமைதியோ... அமைதி!

உதயநிதி
உதயநிதி

உதயநிதியின் காதுகளுக்கும் இந்தத் தகவல்கள் சென்றுள்ளன. குறிப்பாக, 'விழுப்புரம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி தரப்பினரின் தன்னிச்சையான செயல்பாடுகள்தான் இத்தனைக்கும் காரணம்' என்று

" 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் அப்பா பிரகாஷ்ராஜைப் பார்த்து உச்சக்கட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் மகன் 'ஜெயம்' ரவி பேசும் இந்த டயலாக், இப்போது ஆழ்வார்பேட்டை வீட்டில் அப்பா மு.க.ஸ்டாலினைப் பார்த்து 'எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க' என்று மகன் உதயநிதி தரப்பிலிருந்து அதே வேகத்தில் வந்து விழுந்ததாம். இதைத் தொடர்ந்து அங்கு பிரளயமே வெடித்துவிட்டதாக அறிவாலய வட்டாரம் கலகலத்துப்போய் கிடக்கிறது.'' விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/32Z1lMU

''அடடே!''

''அக்டோபர் 24-ம் தேதி காலையில், விக்கிரவாண்டி - நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கின. ஆரம்பத்திலிருந்தே தி.மு.க பின்னடைவில் இருந்ததைக் கண்டு, ஸ்டாலின் குடும்பம் அப்செட்டாம்! விக்கிரவாண்டியில் இருந்த தி.மு.க நிர்வாகிகளிடம் நிலவரங்களைக் கேட்டபடி இருக்க, அன்பகத்தில் ரியாக்‌ஷனோ வேறுமாதிரி இருந்ததாம்.''

ஸ்டாலினிடம் கொந்தளித்த உதயநிதி... ரியாக்‌ஷனோ அமைதியோ... அமைதி!

''சொல்லும்!''

''அன்பகத்தில் கூடியிருந்த இளைஞர் பட்டாளம், 'தோல்விக்குக் காரணமே சீனியர்கள்தான்' என்று சூடாக விவாதித்துள்ளது. `நாடாளுமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைத்த வெற்றி மமதையில், கட்சியின் சீனியர்கள் பலரும் அலட்சியத்துடன் இருந்தார்கள். அதுவே தோல்விக்குக் காரணமாகி விட்டது' என்று டென்ஷனுடன் பேசியுள்ளனர்.

உதயநிதியின் காதுகளுக்கும் இந்தத் தகவல்கள் சென்றுள்ளன. குறிப்பாக, 'விழுப்புரம் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி தரப்பினரின் தன்னிச்சையான செயல்பாடுகள்தான் இத்தனைக்கும் காரணம்' என்று புகார் வாசிக்கப் பட்டதாம். அதன் எதிரொலிதான் அன்று மாலையே ஆழ்வார்பேட்டை இல்லத்தில் அந்த ஆக்ரோஷ டயலாக் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்!''

''காட்சிகளை அப்படியே விவரியும்!''

''ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட ஒருசிலர் மட்டுமே கலந்துகொண்ட அவசர மீட்டிங் அந்த இல்லத்தில் நடைபெற்றதாம். விக்கிரவாண்டி தொகுதியைப் பற்றி முதலில் பேசப்பட்டதாம். 'வேட்பாளர் அறிவிப்பிலிருந்தே குளறுபடிகள் ஆரம்பமாகிவிட்டன. பொன்முடி சொன்னார் என்பதற்காக, வெளியூர் வேட்பாளரை களத்தில் இறக்கினீர்கள். அவரை ஜெயிக்கவைக்க வேண்டிய பொறுப்பும் அவருக்குத்தானே இருந்திருக்கவேண்டும். அதே தொகுதியைச் சேர்ந்த வேறு சிலரின் பெயரை தொகுதி நிர்வாகிகள் சொல்லியும் கேட்காமல், சீட் வழங்கினீர்கள். அந்த வாய்ப்பை அவர் ஒழுங்காகப் பயன்படுத்தினாரா? சீனியர் என்கிற கெத்திலேயே அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார். எனக்கு அங்கிருந்து வந்த தகவல்கள் எதுவுமே பாசிட்டிவ்வாக இல்லை' என்று உதயநிதி தரப்பு உறுமலுடன் ஆரம்பித்ததாம்.''

ஸ்டாலினிடம் கொந்தளித்த உதயநிதி... ரியாக்‌ஷனோ அமைதியோ... அமைதி!

''ஸ்டாலின் ரியாக்‌ஷன்?''

''அமைதியோ... அமைதி. 'ஜெகத்ரட்சகன், எ.வ.வேலு என்று சீனியர்களையெல்லாம் அங்கு அனுப்பினீர்கள். அவர்களை ஒருங்கிணைக்க வேண்டியவர், அதைச் செய்யவில்லை. இதுதான் தோல்விக்கான முதல்படி. உங்களைச் சுற்றி உள்ளவர்களை நீங்கள் கண்காணியுங்கள். அவர்கள் உங்களிடம் ஒருமாதிரி நடந்துகொண்டு, மாவட்டத்தின் பிற நிர்வாகிகளிடம் அதிகாரத் தோரணையில் நடந்துகொள்கிறார்கள். இதற்கு நீங்களே இடம்கொடுத்துவிட்டீர்கள். எல்லா தப்பும் நீங்கதான் செஞ்சீங்க. இதே நிலை நீடித்தால், வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகவும் சிக்கலாகிவிடும்' என்று புகார்களை அடுக்கிக்கொண்டேபோனதாம் உதயநிதி தரப்பு.''

- உதயநிதி பொங்கியதற்கு மேலும் பல காரணங்கள் உள்ளன. அவற்றையும், அ.தி.மு.க-வில் அரங்கேறும் காட்சிகளையும் ஜூனியர் விகடன் கழுகார் பகுதியில் விரிவாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: தி.மு.க தோல்வி "எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க!" - ஸ்டாலினிடம் பொங்கிய உதயநிதி https://www.vikatan.com/government-and-politics/mister-kazhugu-politics-and-current-affairs-november-03

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

ரஜினியின் அரசியல் என்ட்ரியை தள்ளிப்போட்டதா அ.தி.மு.க வெற்றி?

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க பெற்ற வெற்றி, தி.மு.க-வுக்குள் அதிர்ச்சி ரேகைகளைப் படரவிட்டது ஒருபுறம் இருக்க, அது ரஜினியின் அரசியல் 'என்ட்ரி' யையும் பாதித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஸ்டாலினிடம் கொந்தளித்த உதயநிதி... ரியாக்‌ஷனோ அமைதியோ... அமைதி!

ஆந்திர மாநிலத்தில் கட்சி தொடங்கிய சிரஞ்சீவி, அங்கு அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஒருகட்டத்தில் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். சமீபத்தில் அவர் விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், "ரஜினி, அரசியலுக்கு வர வேண்டாம்" என்று ரஜினிக்கு அட்வைஸ் செய்திருந்தார். "இதையெல்லாம் வைத்து கணக்குப்போடும் ரஜினியின் தரப்பு, கட்சி தொடங்கும் முடிவைத் தள்ளிப்போட்டிருக்கிறது'' என்கிறார்கள், ரஜினியின் அரசியலை உற்று கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்கள்.

- இதுகுறித்த விரிவான செய்திக் கட்டுரைக்கு > அரசியலில் இன்னொரு சிரஞ்சீவியாக விரும்பவில்லை ரஜினி! https://www.vikatan.com/government-and-politics/news/did-by-election-results-affect-rajinikanths-political-entry

அடுத்த கட்டுரைக்கு