Published:Updated:

"தமிழ்தான் எங்கள் அடையாளம்... இந்தி பொதுமொழி என்ற கருத்தை முன்வைக்காதீர்கள்!"- வைரமுத்து

கவிஞர் வைரமுத்து

"வடகிழக்கு மாநிலங்களில் நீங்கள் ஆளப்பார்க்கிறீர்கள். இந்தியைத் திணிக்கப் பார்க்கிறீர்கள். இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தாய்மொழி பற்று கொழுந்துவிட்டு எரிகிறது. தமிழ்தான் எங்கள் அடையாளம். மொழிதான் எங்கள் நிலம்" - கவிஞர் வைரமுத்து.

"தமிழ்தான் எங்கள் அடையாளம்... இந்தி பொதுமொழி என்ற கருத்தை முன்வைக்காதீர்கள்!"- வைரமுத்து

"வடகிழக்கு மாநிலங்களில் நீங்கள் ஆளப்பார்க்கிறீர்கள். இந்தியைத் திணிக்கப் பார்க்கிறீர்கள். இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தாய்மொழி பற்று கொழுந்துவிட்டு எரிகிறது. தமிழ்தான் எங்கள் அடையாளம். மொழிதான் எங்கள் நிலம்" - கவிஞர் வைரமுத்து.

Published:Updated:
கவிஞர் வைரமுத்து

தமிழியக்கம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 132-வது பிறந்தநாள் விழா, வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. தமிழியக்க தலைவரும் வி.ஐ.டி வேந்தருமான விசுவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக கவிஞர் வைரமுத்து, தமிழியக்க பொருளாளர் புலவர் பதுமனார், பொதுச்செயலாளர் கவிஞர் அப்துல்காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில், ‘அந்தி வந்தால் நிலவு வரும்... இந்தி வந்தால் பிளவு வரும்’ என்பதை அழுத்தம் திருத்தமாக கவிஞர்கள் பேசினர்.

தமிழியக்க தலைவர் விசுவநாதன்
தமிழியக்க தலைவர் விசுவநாதன்

கவிஞர் வைரமுத்து பேசுகையில், ‘‘அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என பாரதிதாசன் சொன்னார். அதன்படி, வாழ்ந்து காட்டுகிறார் வி.ஐ.டி வேந்தர் விசுவநாதன். வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 54 நாடுகளைச் சேர்ந்த 36,000 மாணவ, மாணவிகள் கல்விக் கற்கின்றனர். தமிழர்கள், இந்தியர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மாந்தர்களுக்கு கல்வி வழங்குபவராக விசுவநாதன் விளங்குகிறார். இவர் திராவிட இயக்கத்தின் வார்ப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாவேந்தர் என்றும் மறக்கப்பட மாட்டார். மரிக்கவும் மாட்டார். விடுதலைக்குப் பிறகும் வாழ்கிறார் அவர். வடநாட்டு கலைஞர்கள் சிலப்பேர், ‘இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி’ என்று சொல்லிகொண்டு இருக்கிறார்கள். பண்பாடு குறையாமல் அவர்களுக்கு ஒரு பதில் சொல்ல விரும்புகிறேன். இந்தி பேசுபவர்கள் மட்டும்தான் இந்தியா என்றால், இந்தி மொழி தேசிய மொழியாக இருந்துவிட்டு போகட்டும். ஆனால், இது ஒரு பன்முக கலாசாரம் உள்ள தேசம். இங்கு, இந்தி பொதுமொழி என்ற கருத்தை பொது வெளியில் யாரும் முன் வைக்காதீர்கள்.

கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்து

வடகிழக்கு மாநிலங்களில் நீங்கள் ஆளப்பார்க்கிறீர்கள். இந்தியைத் திணிக்கப் பார்க்கிறீர்கள். இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தாய்மொழி பற்று கொழுந்துவிட்டு எரிகிறது. மொழியை ‘உயிர்’ என்று சொன்னவர் கவிஞர் பாரதிதாசன். தமிழ்தான் எங்கள் அடையாளம். மொழிதான் எங்கள் நிலம். மொழி எங்கு முடிகிறதோ, அங்கு தமிழ்நாடு முடிகிறது. நிலத்தைத் தீர்மானிப்பதுதான் மொழி. பாரதிதாசனுக்கு மொழி ஆசான் பாரதியார். கருத்து ஆசான் தந்தை பெரியார். ஒரு கவிஞன் தன்னுடைய கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டான். பெயர்தான் நம் அடையாளம். பெயர் என்பது நம் கலாசாரம். பெயர் என்பது நம் மண். பெயர் என்பது வரலாற்றுத் தொடர்ச்சி. எனவே, அனைவரும் தமிழில் பெயர் சூட்டுங்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism