Published:Updated:

''சவுத் இண்டியன்ஸுக்குப் பயங்கரவாதம்னா என்னன்னு தெரியுமா?" - காஷ்மீர் களத்திலிருந்து...

சில ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும்போல. ஏகப்பட்ட தூசும் ஒட்டடையுமாகப் பாழடைந்துகிடந்தது அந்தப் பள்ளி. பள்ளியின் சுவர்களில் தோட்டாக்கள் பாய்ந்ததற்கான அடையாளங்கள்.

காஷ்மீர்
காஷ்மீர்

விகடன் செய்தி ஆசிரியர் பாலகிஷன், தலைமை போட்டோகிராபர் கார்த்திகேயனுடன் காஷ்மீரின் கள நிலவரத்தை அறிய நேரில் சென்றார். அதன் அனுபவக் குறிப்பில் இருந்து...

பாகிஸ்தான் எல்லையையொட்டி காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் இருக்கும் உரி என்கிற கிராமத்துக்குச் செல்ல வேண்டும் என்பது எங்களது அடுத்த இலக்கு. உரி மீதான பயங்கரவாதத் தாக்குதல் நினைவு இருக்கிறதா?

2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி, பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது, இந்திய ராணுவ முகாம்கள்மீது தாக்குதல் நடத்தியதே... அதே இடம்தான்! விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/37dpnGg

அந்தத் தாக்குதலில் இந்தியாவின் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். எதிர்த்தரப்பில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரிலிருந்து 102 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அந்தக் கிராமம். இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையின் சீரியல் எண் என்.ஹெச்-1 இங்கிருந்துதான் தொடங்குகிறது. ஸ்ரீநகரிலிருந்து பாட்டான், கனிஷ்போரா, பாராமுல்லா, பிரிங்கால், நம்பாலா வழியாகச் செல்ல வேண்டும். நம்பாலா தாண்டினால் பெரியதாகப் போக்குவரத்து வசதி இல்லை அல்லது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. நம்பாலா வரை பொதுப்போக்குவரத்து கிடைத்தது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையை நீங்க பார்த்திருக்கீங்களா, பயங்கரவாதத்தின் கோரங்களை அனுபவித்திருக்கிறீர்களா?'' என்று கேட்டார்.

நம்பாலா தாண்டி ஆப்பிள் லோடு வாகனம், சரக்கு ஆட்டோக்கள், கிராமத்து வாகனங்கள் என்று கிடைத்ததைப் பிடித்து பயணித்தோம். ஒருகட்டத்துக்கு மேல் நடைப்பயணம் மட்டுமே. கிராமவாசிகள் வழக்கம்போல, ''இதோ பக்கம்தான். ரெண்டு கிலோமீட்டர்" என்றார்கள். பார்த்தால் அப்படித் தெரியவில்லை.

மேடும் பள்ளமுமாக தொடர்ந்தது பயணம். இடையே ஓர் இடம் கைவிடப்பட்ட கிராமம்போல இருந்தது. அங்கு அரசுப்பள்ளி ஒன்று மூடப்பட்டிருந்தது. இந்திய அரசின் ஆகஸ்ட் 5 நடவடிக்கையால் மூடப்பட்டதுபோல தெரியவில்லை. சில ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும்போல. ஏகப்பட்ட தூசும் ஒட்டடையுமாகப் பாழடைந்துகிடந்தது அந்தப் பள்ளி. பள்ளியின் சுவர்களில் தோட்டாக்கள் பாய்ந்ததற்கான அடையாளங்கள். சில ஒற்றையடிப் பாதைகள். அங்கு ஒரு கிராமம் இருந்ததற்கான எச்சங்கள் மிச்சம் இருந்தன. உரி தாக்குதலுக்குப் பிறகு காலிசெய்யப்பட்ட கிராமமாக இருக்கலாம் என்று தோன்றியது. மதிய வேளை அது. பயணக் களைப்பால் அங்கு சிறிது நேரம் இளைப்பாற முடிவெடுத்தோம்.

சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பினோம். அதுவரை சிக்னல் கிடைக்காமல் இருந்த எனது மொபைலில் திடீரென்று பீப் சத்தம் கேட்டது. எடுத்துப்பார்த்தால் சிக்னல் கோடுகள் ஓரளவு உயர்ந்திருந்தன. கிடைத்த அந்த இடைவெளியில் சோர்ஸ் ஒருவர் அழைத்தார். ''விரைவில் கனடாவின் எட்மன்டன் பகுதியில் காஷ்மீரிகளின் நிலைப்பாடு பற்றிய விளக்கக் கூட்டம் நடக்கிறது. ஜெர்மனியில் பெர்லின் - பிலாகார்ட் பகுதியிலும் காஷ்மீரிகள் அமைதிப் பேரணி நடத்தவிருக்கிறார்கள். இங்கிலாந்தின் லீசிஸ்டர், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் என உலகம் முழுவதும் காஷ்மீரிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமே பேரமைதி நிலவுகிறது" என்றார் அவர். "அப்புறம் பேசுகிறேன்" என்று அவரின் அழைப்பைத் துண்டித்தேன்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

யோசனையுடன் நடந்துகொண்டிருந்தபோது பின்னாலிருந்து வாகனச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால், அது ஒரு ராணுவ வண்டி. ஆள் அரவமற்றப் பகுதியில் நம்மைக் கண்டவர்கள் துணுக்குற்று, வாகனத்தை நம் அருகில் நிறுத்தினார்கள். வாகனத்திலிருந்து இறங்கிய ராணுவ அதிகாரி ஒருவர், "யார் நீங்கள், எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார். "நாங்கள் பத்திரிகையாளர்கள். சென்னையிலிருந்து வருகிறோம்" என்றேன். புருவங்களை உயர்த்தியவர், ''ஓ... சவுத் இண்டியன் ஜர்னலிஸ்ட்!'' என்றார்.

ஏனோ அவர் பேச்சில் கொஞ்சம் கோபம். ''சவுத் இண்டியன்ஸுக்குப் பயங்கரவாதம்னா என்னன்னு தெரியுமா... ரொம்பவும் பாதுகாப்பான ஏரியாவுல உட்கார்ந்துட்டு கவர்மென்ட்டைப் பத்தி தப்புத்தப்பா எழுதுறீங்க... இந்தியா - பாகிஸ்தான் எல்லையை நீங்க பார்த்திருக்கீங்களா, பயங்கரவாதத்தின் கோரங்களை அனுபவித்திருக்கிறீர்களா?'' என்று கேட்டார். திடீரென அமைதியானவர், "எங்கே செல்கிறீர்கள்?" என்று கேட்டு, "வழியில் ஒரு முகாம் இருக்கிறது. வாருங்கள்... சூடாகத் தேநீர் அருந்திக்கொண்டே பேசலாம்'' என்று வாகனத்தில் நம்மை ஏற்றிக்கொண்டார்.

காஷ்மீர்
காஷ்மீர்

ஐந்து நிமிட பயணத்தில் ஒரு ராணுவ முகாம் வந்தது. செக் போஸ்ட்டுக்கு வெளியே நமமூர் டீக்கடை பெஞ்சு போல ஒன்று போடப்பட்டிருந்தது. அங்கு அமர்ந்துகொண்டோம். நான் அவரிடம், ''ராணுவத்தில் கமாண்டர் இருப்பதைப்போல பயங்கரவாத அமைப்புகளிலும் கமாண்டர்கள் இருக்கிறார்களாமே... சமீபத்தில் இதுபோன்ற 11 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீநகரில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்கள் என்று கேள்விப்பட்டோம், உண்மையா?'' என்று கேட்டேன்.

''எங்களுக்கும் உளவுப்பிரிவு நோட் போட்டு அனுப்பிய தகவல்தான் இது. ஆனால், உறுதிப்படுத்தப்படவில்லை. இந்திய ராணுவத்தில் கமாண்டர், வீரர்கள், உளவுப்பிரிவினர் இருப்பதைப்போல பயங்கரவாத இயக்கங்களிலும் இருக்கிறார்கள். அந்த அமைப்புகளில் காஷ்மீருக்கென்று பிரத்யேக கமாண்டர்களும் இருக்கிறார்கள்.'' என்றவர், சற்றே தயக்கத்துடன் ஒரு விஷயத்தைச் சொன்னார்.

- ஜூனியர் விகடன் மினி தொடரில் விரிவாக வாசிக்க > இரும்புத்திரை காஷ்மீர்! - காஷ்மீரில் கிளை தொடங்கியிருக்கிறதா ஐ.எஸ்.ஐ.எஸ்? https://www.vikatan.com/news/general-news/mini-series-about-kashmir-nov-20

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo