Published:Updated:

இந்திய கம்யூ.,களின் 100 - எவற்றைப் புறந்தள்ளுதல், கைவிடுதல் அவசியம்?

ஜனநாயகக் கருத்தாக்கம், அதன் உரிமைகள் மறுக்கப்பட்டு மதநல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ள இன்றைய சூழலில் இவர்களின் பங்களிப்பு சமூகத்துக்கு அதிமுக்கியத் தேவை!

கம்யூனிஸ்ட்டு
கம்யூனிஸ்ட்டு

விடுதலைப் போராட்டத்தில் பொதுவுடைமைவாதிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இன்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஆகியோரே அதற்குச் சாட்சி. ஆனாலும், கம்யூனிஸ்ட்டுகளின் சில முரண்பாடான முடிவுகள், சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்கேற்பை நீர்த்துப்போகச் செய்தன. 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பொதுவுடைமைவாதிகள் ஒதுங்கி நின்றார்கள். அந்தக் காலகட்டத்தில் ஜெர்மனிக்கு எதிராக சோவியத் ரஷ்யா போர்புரிந்தது. அதன் நட்பு நாடுகளின் பட்டியலில் பிரிட்டனும் இருந்தது. இந்தியாவில் பிரிட்டனுக்கு எதிராகப் போராடினால், அது ரஷ்யாவை எதிர்ப்பதாகவே எடுத்துக்கொள்ளப்படும் என்ற காரணத்தால்தான் ஒதுங்கி நின்றது இந்தியப் பொதுவுடைமை இயக்கம். அதேபோல, ஜப்பானுடன் கைகோத்து பிரிட்டிஷாருக்கு எதிராக நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்தின் நேரடி போரையும் அந்த இயக்கம் ஆதரிக்கவில்லை. அது ஜப்பான் ஆதரவு நிலையாக எடுத்துக்கொள்ளப்படும் என பயந்தனர் பொதுவுடைமைவாதிகள். இதெல்லாம் இந்தியாவில் பொதுவுடைமைவாதிகளுக்கு பின்னடைவையே பெற்றுத்தந்தன. பிறகு நாடு விடுதலை அடைந்தபோது கம்யூனிஸ்ட்டுகள் அந்த விடுதலையை 'உழைக்கும் மக்களுக்கான விடுதலை இல்லை' என்றும் கருதினர்... விரிவான கட்டுரைக்கு க்ளீக் செய்க... http://bit.ly/2NzX3X2

நல்லகண்ணு, சங்கரய்யா,
நல்லகண்ணு, சங்கரய்யா,

ஒருகட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாகக்கூட பார்க்கப்பட்டனர். 1957-ம் ஆண்டில் கேரளத்தில் ஆட்சியைப் பிடித்தார்கள். நிலச்சீர்திருத்தம், கல்வியை ஜனநாயகப்படுத்துதல், மின்சாரம், நீர்ப்பாசனம் என மக்கள் நலன் சார்ந்து அந்த ஆட்சி நிகழ்த்திய செயல்பாடுகள்தான், இன்று வரை கேரளத்தில் ஆளும்கட்சியாக அதை வைத்துள்ளன. ஆனால், தத்துவம் சார்ந்து அரசாங்கத்தில் பங்கேற்பது தொடர்பாக அந்தக் கட்சியில் நிகழ்ந்த விவாதங்கள், சீனாவை ஆதரிக்கும் போக்கிலிருந்த கருத்து வேறுபாடுகள், சீனா, இந்தியாவின்மீது படையெடுத்த பிறகு நிகழ்ந்த விவாதங்களால் 1964-ம் ஆண்டில் சி.பி.ஐ (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) மற்றும் சி.பி.எம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட்) என்று கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. மாவோயிஸ்ட் இயக்கம், நக்சல்பாரி இயக்கம் என அடுத்தடுத்து நடந்த தொடர் பிளவுகள் பொதுவுடைமை இயக்கத்தை மேலும் பலவீனப்படுத்தின. மேற்குவங்கத்தில் நீண்டகால ஆட்சியை வழங்கிய சி.பி.எம்., தனது பொதுவுடைமைப் பண்பாடு சார்ந்த பதிவுகளை ஆழமாகப் பதிக்கத் தவறியது...

கடந்த 2001-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலர் இந்திரஜித் குப்தா 'ஃப்ரென்ட்லைன்' இதழுக்கு வழங்கிய பேட்டியில், 'கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்தியச் சூழலை இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை' என்று குறிப்பிட்டார். மேலும், 'ஆயிரம் ஆண்டுகளாக சாதி இருந்துவருகிறது. கம்யூனிஸ்ட்டுகள் தங்களை சாதிகளுக்கு மேலானவர்கள் எனக் கருதினர். எனவே, சாதியப் பிரச்னை அவர்களுக்குப் பிரச்னையாகவே தெரியவில்லை. ஆனால், சமூகமோ சாதியாக உள்ளது. போனஸ், ஊதிய உயர்வுக்கு எங்களை ஆதரிக்கும் தொழிலாளி, தேர்தலில் எங்களை விட்டுவிட்டு சொந்த சாதிக்காரனுக்கு வாக்களிப்பது நடக்கிறது' என்று கூறியுள்ளார்.

பெரியாரையும், அம்பேத்கரையும், அவர்கள் முன்னெடுத்த அரசியலையும் இப்போதாவது பொதுவுடைமை இயக்கம் ஏற்றுக்கொண்டிருப்பது, இந்தியச் சூழலை வேறு கோணத்தில் அறிய உதவும். ஆனால், டெல்லியிலிருந்து திணிக்கப்படும் செயல்திட்டங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுவதைக் காட்டிலும், மாநிலத்தின் மனஉணர்வுகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை அவசியம். அது மக்களிடமிருந்து தனிமைப்படுவதிலிருந்து தடுக்க உதவும்.

இன்றைய சூழலில் இவர்களின் பங்களிப்பு சமூகத்துக்கு அதிமுக்கியத் தேவை. இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாட்டில், அவர்களை கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் அரசியலுக்குள் கொண்டுவருவதும், புதிய சிந்தனை மற்றும் செயல்பாட்டுக்கு வழிவிடுவதும், அதற்கான தளங்களை உருவாக்குவதும் மிக அவசியம்

2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 60 இடங்களைப் பிடித்த இடதுசாரிகள், 2019-ம் ஆண்டு தேர்தலில் வெறும் ஐவராகச் சுருங்கி உள்ளனர். தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை இது பெரும்பின்னடைவு. ஆனால், இன்றைக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், பழங்குடிகள், ஏழை மக்களின் உரிமைகளுக்காக பெரும்திரளாகப் போராடி, அவர்களுக்கான குரலாக ஒலிப்பது கம்யூனிஸ்ட்டுகளின் குரல் மட்டுமே. தோல்விகளால் அவர்கள் சோர்ந்துவிடவில்லை. ஜனநாயகக் கருத்தாக்கம், அதன் உரிமைகள் மறுக்கப்பட்டு மதநல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ள இன்றைய சூழலில் இவர்களின் பங்களிப்பு சமூகத்துக்கு அதிமுக்கியத் தேவை. இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாட்டில், அவர்களை கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் அரசியலுக்குள் கொண்டுவருவதும், புதிய சிந்தனை மற்றும் செயல்பாட்டுக்கு வழிவிடுவதும், அதற்கான தளங்களை உருவாக்குவதும் மிக அவசியம். எல்லாவற்றுக்கும்மேலாக அனைத்து கம்யூனிஸ்ட்டுகளும் முரண்பாடுகளைப் புறந்தள்ளி ஒரு புள்ளியிலாவது இணைய வேண்டியது காலத்தின் தேவை. கூட்டுச் செயல்பாடுகளில் பெரியண்ணன் மனப்பான்மையைக் கைவிடுவதும் அவசியம்.

- நூற்றாண்டைக் கொண்டாடுகிறது இந்தியாவின் பொதுவுடமை இயக்கம் (Communist Party of India). ஆனால், முதலில் இந்த இயக்கம் தொடங்கப்பட்ட இடம் இந்தியா அல்ல, ரஷ்யா. > எழுத்தாளர் ச.பாலமுருகன் பார்வையில் ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் நூற்றாண்டுப் பயணம்: ஒரு மீள் பார்வை! https://www.vikatan.com/government-and-politics/politics/centenary-memories-of-communist-party-of-india

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > 'ஈஸி - நியூஸி' மாதாந்திர பேக் ரூ.99 மட்டுமே. > சப்ஸ்க்ரைப் செய்ய> https://bit.ly/2KccySR |