தமிழக அமைச்சர்கள் சென்னை வர முதலமைச்சர் பழனிசாமி திடீர் உத்தரவு!

மிழக அமைச்சர்கள் அனைவரும் நாளை சென்னை வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்து துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. 

எடப்பாடி பழனிசாமி

கடந்த 2 நாள்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் இணைந்தையடுத்து, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இதனால், அதிருப்தி அடைந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், புதுச்சேரியில் உள்ள  தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திடீர் அறிவிப்பாகத் தமிழக அமைச்சர்கள் அனைவரும் நாளை சென்னை வர வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறபித்துள்ளார். இதனிடையே, அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்டுவது குறித்து, துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் நாளை ( 24 -ம் தேதி) ஆலோசனை நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!