Published:Updated:

மத்திய உள்துறை செயலாளராக ராஜீவ் கௌபா பதவியேற்பு

மத்திய உள்துறை செயலாளராக ராஜீவ் கௌபா பதவியேற்பு
மத்திய உள்துறை செயலாளராக ராஜீவ் கௌபா பதவியேற்பு

மத்திய உள்துறை செயலாளராக ராஜீவ் கௌபா பதவியேற்பு

மத்திய உள்துறை செயலாளராக ராஜீவ் கௌபா இன்று பதவியேற்றுக்கொண்டார். 

மத்திய உள்துறை செயலாளராக ராஜீவ் கௌபா பதவியேற்பு


உள்துறை செயலாளராக இருந்த ராஜீவ் மெஹ்ரிசி ஓய்வுபெற்றதை அடுத்து புதிய செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். 1982-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர், இரண்டு ஆண்டுகள் இந்த பதவி வகிப்பார். அவர் இதுவரை நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளராகப் பதவி வகித்து வந்தார். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 1959-ம் ஆண்டு பிறந்த ராஜீவ் கௌபா, பாட்னா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். மத்திய அரசுப் பணியில் கடந்தாண்டு இணைவதற்கு முன்பாக ஜார்க்கண்ட் மாநில தலைமைச் செயலாளராக 15 மாதங்கள் அவர் பணியாற்றினார். நிதியமைச்சகம், உள்துறை அமைச்சகம், பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ஆகியவற்றில் அவர் பணியாற்றி இருக்கிறார். உள்துறை செயலாளர் என்கிற முறையில், உள்நாட்டு பாதுகாப்பு, ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் தீவிரவாதப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அவர் கையாள வேண்டி வரும்.  

அடுத்த கட்டுரைக்கு