எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மேடையில் தீ விபத்து!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டதில் நடைபெற்ற விழாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இன்று வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் நடைபெற்று வருகிறது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்வர் பேசிக்கொண்டு இருக்கும்போது மின்கசிவு காரணமாக, தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாகத் தீ அணைப்பான் பயன்படுத்தபட்டதால் மேடையில் புகை மூட்டம் உருவனது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மேடையில் இருந்தவர்கள் சிறிது நேரம் எழுந்து விலகி நின்றனர். எனினும், முதல்வர் தொடர்ந்து பேசிகொண்டிருந்தார்.  

ஏற்கனவே  திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எல்.இ.டி திரை வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடடத்க்கது.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!