ஊழல் அரசியல்வாதிகள் மீண்டும் பதவிக்கு வருவது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி | why and how corrupted politicians come back to their positions asks SC

வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (13/09/2017)

கடைசி தொடர்பு:10:33 (13/09/2017)

ஊழல் அரசியல்வாதிகள் மீண்டும் பதவிக்கு வருவது ஏன்? - உச்ச நீதிமன்றம் கேள்வி

இந்தியாவில் அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்குப் பெரிதாக எந்தத் தண்டனையும் கிடைப்பதில்லை. ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் அனைவருமே மீண்டும் பதவியில் அமர்ந்துவிடுகின்றனர். இது எப்படி நடக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

ஊழல்

லக்னோவைச் சேர்ந்த ‘லோக் பிரஹாரி’ என்ற அரசு சாரா அமைப்பு, தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வுசெய்து, அந்த ஆய்வின் மூலம் மக்களவை உறுப்பினர்கள் 26 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 11 பேர் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 257 பேர் ஆகியோரின் சொத்து மதிப்பு திடீரென்று உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்டு, உச்ச நீதிமன்றத்திடம் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடர்ந்திருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லஞ்சம், ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு போன்ற வழக்குகளில் சிக்கும் அரசியல்வாதிகள், மீண்டும் பதவியில் அமர்ந்துவிடுவதை, கடந்த 30 வருடங்களாகவே பார்க்கிறோம். எப்படி இது நடக்கிறது, எங்கே தவறு நடக்கிறது, விசாரணை சரியில்லையா அல்லது அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்களா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க