Published:Updated:

5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!
5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!
5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

வேளான் துறைக்கான கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்த எல்.சித்ரசேனன்,  காஞ்சிபுர மாவட்ட ஆட்சியராக தற்போது உள்ள ஹனிஷ் சாப்ராவுக்குப் பதிலாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹனிஷ் சாப்ரா சித்ரசேனன் வகித்து வந்த வேளாண் துறைக்கான கூடுதல் இயக்குனர்  பதவியில் நியமிக்கப்படுகிறார்.

தகவல் & பொது ஜனதொடர்பு துறை இயக்குனர் டாக்டர் பி. சங்கர் வேலூர் மாவட்ட  ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியரான அஜய் யாதவ், நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையராக  பணியாற்றும் டாக்டர் டி. ஜெகநாதனுக்குப் பதிலாக நியமிக்கப்படுகிறார்.

டி. ஜெகநாதன், நாமக்கல் மாவட்ட ஆட்சியராக தற்போது பணியாற்றி வரும்  குமரகுருபனுக்குப் பதிலாக நியமிக்கப்படுகிறார்.

குமரகுருபன், தகவல் மற்றும் பொது ஜனதொடர்பு துறை இயக்குனராக இடமாற்றம்  செய்யப்படுகிறார்.

அரியலூர் ஆட்சியர் அனு ஜார்ஜ்க்குப் பதிலாக, தமிழக அரசின் ( புரட்டோகால்) பொதுத்  துறைக்கான துணை செயலராக  உள்ள பி.செந்தில்குமார் அரியலூர் ஆட்சியராக  நியமிக்கப்படுகிறார்.

அனு ஜார்ஜ், செந்தில்குமார் வகித்த பதவிக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.