Published:Updated:

வாய்தா வாங்குவதற்கு முற்றுப்புள்ளி!

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு டெல்லி காட்சிகள்

வாய்தா வாங்குவதற்கு முற்றுப்புள்ளி!

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு டெல்லி காட்சிகள்

Published:Updated:
##~##

வாய்தா மேல் வாய்தா வாங்கி சொத்துக் குவிப்பு வழக்கில் போக்குக் காட்டிக் கொண்டிருந்த ஜெயலலிதாவுக்கு கடைசியில் செக் வைத்துவிட்டது உச்ச நீதிமன்றம். 'சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆக வேண்டும்’ என்று அதிரடி உத்தரவு இட்டிருக்கிறது.

 ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்பு தமிழகத்தில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாய்தா வாங்குவதற்கு முற்றுப்புள்ளி!

நடந்து வந்த இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2004-ம் ஆண்டு முதல் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. 'வழக்கைத் தொடர உரிய அனுமதி பெறவில்லை, விசாரணை முழுமையும் ரத்து செய்ய வேண்டும், குற்றப்பத்திரிகையை மொழிபெயர்த்து தரவேண்டும், சாட்சி விசாரணை நடத்தக் கூடாது, குற்றப் பத்திரிகையில் தவறுகள்...’ என்று பல்வேறு காரணங்கள் காட்டி, வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வர் ஆன நிலையில் பெங்களூரு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட ஆரம்பித்தது. 'வாக்குமூலத்தை பதிவு செய்ய ஜெயலலிதா நேரில் ஆஜர் ஆக வேண்டும்’ என்று கண்டிப்பு காட்டவே, உச்ச நீதிமன்றத்தை அணுகினார் ஜெயலலிதா.

கடந்த 5-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில், ஹரிஷ் சால்வே ஆஜர் ஆனார். சீனியர் வழக்கறிஞரான இவர், உச்ச நீதிமன்றத்தில் அதிகம் கட்டணம் வாங்கும் வக்கீல்களில் ஒருவர் என்று சொல்லப்படுபவர். அம்பானி சகோதரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் ஆஜர் ஆகும் அளவுக்கு பிரபலமானவர். அதனால் தான் ஹரீஷ் சால்வேவை ஜெயலலிதாதான் ஓகே செய்தாராம். டெல்லியில் பிரபலமான தாஜ் மான்சிங் என்கிற நட்சத்திர ஹோட்டலில்தான் இவருடைய அலுவலகம் இயங்கிவருகிறது என்றால் பாருங்களேன்!

வாய்தா வாங்குவதற்கு முற்றுப்புள்ளி!

வழக்கு விசாரணைக்கு வந்ததுமே  ஜெயலலிதாவின் மனுவைத்  தள்ளுபடி செய்யும் மனநிலையில்தான் நீதிபதிகள் இருந்தார்களாம்.  'இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள என்ன முகாந்திரம் இருக்கிறது? சீனியர் வழக்கறிஞரான உங்களுக்கு இது தெரியாதா?’ என்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகிய இருவரும் கேட்டுள்ளனர். 'குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313-ன் படி குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும். இது குற்றம் சாட்டபட்டவருக்கான உரிமையும் கூட. நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என்பது தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது’ என்றார்கள் நீதிபதிகள். உடனே ஹரீஷ் சால்வே, ''நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளை

வாய்தா வாங்குவதற்கு முற்றுப்புள்ளி!

கொடுத்தால் அதற்கு உரிய பதில் கொடுக்க எனது கட்சிக்காரர் தயாராக இருக்கிறார்'' என்று பதில் அளித்தார்.  ''கேள்விகள் கேட்டு அதற்கு குற்றம் சாட்டப்பட்டவர் பதில் சொல்லும் போது அதை வைத்து துணைக் கேள்விகளை நீதிபதி கேட்பார். அதோடு குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையைத்தான் சொல்கிறாரா? என்பதை அவரது ரியாக்ஷனை வைத்தே நீதிபதி முடிவு எடுக்க முடியும். எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்போது அதை நீதிமன்றத்தால் புரிந்து கொள்ளமுடியாது. நேரில் ஆஜர் ஆவதுதான் உங்களுக்கு நன்மையாக இருக்கும். இந்த நடைமுறையை மாற்றினால் அது பின்னால் வருகிற வழக்குகளுக்கு முன்னுதாரணம் ஆகிவிடும்!'' என்று நீதிபதிகள் கூறினார்கள்.  

கடைசியில் பாதுகாப்பு பிரச்னையைக் கிளப்​பினார் ஹரீஷ் சால்வே. அதற்கு, ''எந்த நாளில் பெங்களூரு கோர்ட்டில் ஜெயலலிதா ஆஜர் ஆவாரோ அந்த நாளில் கூடுதல் பாதுகாப்பை கொடுக்க சொல்கிறோம்'' என்று பதில் தந்தார்கள் நீதிபதிகள்.

மொத்தத்தில் ஹரீஷ் சால்வே வாதத்தைவிட நீதிபதிகள்தான் அதிகமாக கருத்து சொன்னார்கள். கடைசியில் ''பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கை மேலும் சில மாதங்கள் தாமதம் செய்யும் செயலாகவே இது தெரிகிறது. இதனால் ஜெயலலிதா பெங்களூரூ கோர்ட்டில் கட்டாயம் ஆஜர் ஆக வேண்டும். எப்போது ஆஜர் ஆவார் என்பதை 12-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்!'' என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு பற்றி சட்ட நிபுணர்கள் சிலரிடம் பேசிய போது, ''இந்த வழக்கில் இனியும் ஜெயலலிதா வாய்தா வாங்கிக் கொண்டிருக்க முடியாது. ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்து கொண்டு, சொத்து குவிப்பு வழக்கில் ஆஜர் ஆவதை ஜெயலலிதா விரும்பவில்லை. அப்படி அவர் ஆஜர் ஆகும் போது தேசிய சேனல்கள் வரையில் அது செய்தியாகும். அதை தவிர்க்க விரும்புகிறார். கேள்விகளை அனுப்பி அதற்கு பதில் சொல்வதாக இருந்தாலும், அவர் சொல்லும் பதில் உண்மையா என்பதை கோர்ட்டில் அவர் நேரில் வந்து சொல்லும் போதுதான் தெரியும். சம்பந்தப்பட்டவரின் முகபாவனைகளை நீதிபதி உற்று நோக்குவார். அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாமல் போகக் கூடாது என்பதற்காகத்தான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக சொல்கிறார்கள். இதில் இன்னொரு சிக்கலும் உண்டு. நேரில் ஆஜர் ஆகாமல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டால் இதையே ஒரு காரணமாக சொல்லி கேள்வி எழுப்ப முடியும். அதனால் வேறு வழியே இல்லை. ஜெயலலிதா ஆஜர் ஆகத்தான்வேண்டும்'' என்றார்கள்.

என்ன செய்யப்போகிறார் ஜெயலலிதா?

- சரோஜ் கண்பத், எம். பரக்கத் அலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism