Published:Updated:

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை வரவேற்ற கமல்ஹாசன் மகள்!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை வரவேற்ற கமல்ஹாசன் மகள்!
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை வரவேற்ற கமல்ஹாசன் மகள்!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை வரவேற்ற கமல்ஹாசன் மகள்!

மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை, விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் மகள் அக்‌ஷரா ஹாசன் வரவேற்றார்.

ட்விட்டர் கருத்துகள்மூலம் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திவந்த கமல்ஹாசன், சமீபகாலமாக மேடைகளிலும் அரசியல் பேசத் தொடங்கிவிட்டார். இதனால், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம்குறித்தும் பல்வேறு ஊகங்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையில், சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று நடைபெறவிருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு வருகைதரும் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், கமல்ஹாசனைச் சந்திக்க உள்ளார். 

மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னர், கமல்ஹாசனைச் சந்திக்க உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன், சென்னை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்துச்சென்றார். மேலும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் கமல்ஹாசனைச் சந்தித்துப்பேசவிருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில் கேரளா சென்ற கமல்ஹாசன், முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்துப் பேசியிருந்தார். தமிழகத்தில், ஆளும் கட்சியையும் அரசின் ஊழலையும் கமல் கடுமையாக விமர்சித்துவரும் நிலையில், இரண்டு மாநில முதலமைச்சர்கள் அவரைச் சந்தித்துப் பேசவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த கட்டுரைக்கு