Published:Updated:

ஜெட்லிக்கு மீண்டும் பதிலடி கொடுத்த சின்ஹா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜெட்லிக்கு மீண்டும் பதிலடி கொடுத்த சின்ஹா!
ஜெட்லிக்கு மீண்டும் பதிலடி கொடுத்த சின்ஹா!

ஜெட்லிக்கு மீண்டும் பதிலடி கொடுத்த சின்ஹா!

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா விமர்சித்திருந்தார். இதற்கு ஜெட்லி, சின்ஹாவைத் தாக்கிப் பேசியிருந்தார். தற்போது சின்ஹா, ஜெட்லிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க-வின் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, யஷ்வந்த் சின்ஹா மத்திய நிதி அமைச்சராக இருந்தார். இவர், பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவராவார். சில நாள்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகையில், நாட்டின் பொருளாதாரம் குறித்து கட்டுரை ஒன்று எழுதினார் சின்ஹா. அந்தக் கட்டுரையில், 'நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் தொடர் சொதப்பல் நடவடிக்கைகளால் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விட்டார். மீண்டும் பொருளாதாரத்தைத் தழைக்கவைக்கும் நடவடிக்கைகளும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. அவர், இதுகுறித்து கட்டாயமாக இப்போது பேசியாக வேண்டும். இது, பா.ஜ.க-வில் இருக்கும் பலருக்கே தெரியும். ஆனால், அதைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள்' என்று கூறி, பல உதாரணங்களுடன் ஜெட்லிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் சின்ஹா. இதற்கு ஜெட்லி, '80 வயதாகும் சின்ஹா, புதிய வேலைக்கு முயல்கிறார்' என்று கூறியிருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சின்ஹா, 'நான் ஐ.ஏ.எஸ் பதவியில் இருக்கும் போதே, அதை விடுத்து அரசியலுக்கு வந்தேன். எனவே, 80 வயதில் எனக்கு எந்த வேலையும் தேவைப்படாது. 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று நானே முடிவு செய்தேன். அருண் ஜெட்லிக்கும் இது தெரியும். அப்படியிருந்தும் அவர் என்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளார்' என்று தெரிவித்துள்ளார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு