Published:Updated:

ஸ்ரீநகரில் தீவிரவாதத் தாக்குதல்..! உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்ரீநகரில் தீவிரவாதத் தாக்குதல்..! உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை
ஸ்ரீநகரில் தீவிரவாதத் தாக்குதல்..! உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

ஸ்ரீநகரில் தீவிரவாதத் தாக்குதல்..! உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஶ்ரீநகரில், ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கிச் சூடு நடந்துவருவதால், விமான நிலையத்துக்குள் ஊழியர்கள், பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

ஸ்ரீநகரில் தீவிரவாதத் தாக்குதல்..! உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை


ஶ்ரீநகரிலுள்ள ராணுவ முகாமில், இன்று காலை திடீரென தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர் தாக்குதல் நடைபெற்றுவருகிறது. ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஶ்ரீநகர் விமானநிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள், விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்துவருகிறது. இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் விவகாரம்குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், உயர் அதிகாரிகள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு