Published:Updated:

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தது மத்திய அரசு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தது மத்திய அரசு!
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தது மத்திய அரசு!

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தது மத்திய அரசு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெட்ரோல், டீசலுக்கான அடிப்படை கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை வந்தபிறகு அவற்றின் விலை பலமடங்கு உயர்ந்ததாகக் கூறி, பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்ட புயல் உள்ளிட்ட காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருப்பதாகக் கூறியிருந்த பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தீபாவளிப் பண்டிகையையொட்டி விலை குறையும் என்றும் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில், பெட்ரோல், டீசலுக்கான அடிப்படி கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 வரை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு (அக்.4) முதல் அமலாவதாகவும், இதனால் அரசுக்கு நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள காலத்தில் ரூ.13,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு