Published:Updated:

அருண்ஜெட்லி தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்..!

அருண்ஜெட்லி தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்..!
அருண்ஜெட்லி தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்..!

அருண்ஜெட்லி தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்..!

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் இன்று, 22-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. 

அருண்ஜெட்லி தலைமையில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்..!


ஜூலை 1-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரி நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் பல்வேறு குளறுபடிகள் இருந்துவருகின்றன. எனவே, ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகும், தொடர்ச்சியாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. அந்தக் கூட்டத்தில், வியாபாரிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், இன்று மத்திய நிதியமைச்சர் தலைமையில் 22-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அதில், மாநில நிதிஅமைச்சர்கள் கலந்துகொள்வார்கள். இன்று நடைபெற உள்ள கூட்டத்தில், சிறு தொழில் முனைவோர்களுக்கு சாதகமான அம்சங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாபார அளவை (turn over) மாதத்துக்கு ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என்று மாற்றப்பட வேண்டும் என்றும் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். அது தொடர்பான முடிவுகள் இன்று எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த கட்டுரைக்கு